Home /News /trend /

5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வளர்த்தவருடன் இணைந்த நாய்- எமோஷ்னல் வீடியோ!

5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வளர்த்தவருடன் இணைந்த நாய்- எமோஷ்னல் வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : ஒரு நாயும் அதன் உரிமையாளர்களும் 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள்.

அவ்வப்போது ஆன்லைனில் வைரலாகும் நூற்றுக்கணக்கான வீடியோக்களில், நாம் அனைவரும் 'லைக்' செய்யக்கூடிய ஒரு 'கேட்டகரி' உள்ளதென்றால் - அது விலங்குகள் வீடியோக்கள்தான். அதாவது விலங்குகளை பற்றிய வீடியோக்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் 'பெட்' வீடியோக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; வியூஸ்களும், ஷேர்களும், லைக்குகளும் சும்மா அள்ளும்! ஏனெனில் வளர்ப்பு பிராணிகளுக்கும் மனிதர்களுமான 'ரிலேஷன்ஷிப்' அப்படி!

நாய்களும் அல்லது பூனைகளும் அல்லது வேறு ஏதாவது வளர்ப்பு பிராணிகளும்,  அதை வளர்க்கும் மனிதர்களும் வழக்கத்திற்கு மாறாக பகிர்ந்து கொள்ளும் அன்பின் பிணைப்பை வெளிப்படுத்தும் எந்தவொரு வீடியோக்களுமே நம்மை உணர்ச்சிவசப்படுத்துகின்றன. அப்படியான ஒரு எமோஷனல் வீடியோ தான் 'பெட் லவ்வர்ஸ்' க்கு மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது

அந்த வீடியோ, திருடப்பட்ட ஒரு நாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன்னை வளர்த்தவர்களுடன் மீண்டும் இணைவதை காட்சிப்படுத்துகிறது. நீங்கள் நாய் பிரியர் என்றால், கையில் கர்சீப் அல்லது டிஷூ பேப்பர் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் இந்த வீடியோ உங்கள் இதயத்தை கனமாக்கலாம், உங்களுக்கு கண்ணீரை வர வைக்கலாம்.

also read : என்ன ஒரு ஆசீர்வாதம்.. இந்த வீடியோவ பாருங்க - ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா..

'தி குட் நியூஸ் மூவ்மென்ட்' என்கிற ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவின் கேப்ஷன் ஆக, “ஒரு நாயும் அதன் உரிமையாளர்களும் 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். முன்னதாக இந்த நாய் திருடு போனது, இதன் உரிமையாளர்கள் இந்த நாயை மீண்டும் பார்க்கவே மாட்டோம் என்று நினைத்தனர்” என்று எழுதப்பட்டுள்ளது.


வெளியான வீடியோவில், ஒரு பெரிய கூண்டுக்குள் பல நாய்கள் வெறுமனே சுற்றித் திரிவதை பார்க்க முடிகிறது. அந்த கூண்டை நோக்கி இருவர் மிகவும் பரபரப்பாக ஓடி வருகிறார். அவர்களை பார்த்த உடனேயே ஒரு நாய் அவர்களை அடையாளம் கண்டு கொள்கிறது. அவர்களை வாலாட்டி வரவேற்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தன்னை வளர்த்தவர்களை சந்தித்த உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாய் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. அந்த இருவரில் ஒரு பெண், கீழே அமர்ந்து, பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தன் நாயை கட்டிபிடித்தபடி கதறி அழுகிறார். இப்படியாக உணர்ச்சிப்பொங்க அந்த வீடியோ முடிவடைகிறது.

also read : அவ்ளோ பெரிய கின்னஸ் சாதனையை அசால்ட்டாக செய்த ஜோடி - வைரல் வீடியோ
பெட் லவ்வர்களை கண்கலங்க வைக்கும் இந்த  வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஷேர் செய்யப்பட்டதில் இருந்து, இந்த வீடியோ 7.4 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பிட்ட வீடியோவின் கமெண்ட்டில் ஒருவர் "இது என்ன வகை நாய்?" என்று கேட்க அதற்கு பதிலளிக்கும் வண்ணம் ஒருவர், "அன்பை பொழியும் வகை... மற்ற எல்லா வகை நாய்களை போலவும்!" என்று கூறி உள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி