முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர் - வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா?

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர் - வயிற்றில் இருந்தது என்ன தெரியுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வயிற்று வலிக்கிறது என்று மருத்துவமனைக்குச் சென்றவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி, வினோத பொருட்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Odisha (Orissa), India

ஒடிஸா மாநிலத்தில் வயிற்று வலியால் அவதியடைந்து வந்த நபரின் வயிற்றில் ஸ்டீல் டம்ளர் இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், அதனை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். அதேபோல் வங்கதேச பெண்ணின் வயிற்றிலிருந்த கத்தரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த அந்த நபர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவராம். குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள பஞ்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்குத் தொடர்ந்து 10 தினங்களாக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மது அருந்திய பின்னர், கடுமையான வயிற்று வலி வந்த நிலையில், சூரத் நகரில் இருந்து ஒடிஸா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பினார்.

இந்நிலையில், அந்த நபரின் வயிறு மற்றும் கால்கள் ஆகியவை வீக்கம் அடையத் தொடங்கின. வலி தாங்க முடியாத நிலையில், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் அதிர்ச்சிகர தகவலாக வயிற்றில் ஸ்டீல் டம்ளர் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர், அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்றினர். தற்போதைய சூழலில் நோயாளி நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வங்கதேச பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் நீக்கம்:

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த 4 ஆண்டுகளாக மிகக் கடுமையான வயிற்று வலி நீடித்து வந்தது. இந்த நிலையில், மருத்துவர்களை அவரை பரிசோதனை செய்தபோது, வயிற்றில் ஒரு ஜோடி கத்தரிக்கோல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக அவை நீக்கம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்தக் கத்தரிக்கோல்கள் பெண்ணின் வயிற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கும் என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக, கால் பிளாடர் கல் பிரச்சினை காரணமாக இந்த பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் மருத்துவர்கள் தவறுதலாக கத்தரிக்கோல்களை வயிற்றினுள் வைத்து தையல் போட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Also Read : செய்தி வாசிப்பாளர் வாய்க்குள் புகுந்த ஈ... நேரலையில் நடந்த வைரல் சம்பவம்!

வங்கதேசத்தின் குல்னா மண்டலத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் இந்த பெண்ணுக்குக் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோல்களை அகற்றினர். இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், “உடல்நலக் கோளாறு காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என்று தான் நாங்கள் இவ்வளவு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், வயிற்றின் உள்ளே கத்தரிக்கோல்கள் இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. ஒருவழியாக அறுவை சிகிச்சை செய்து தற்போது குணம் அடைந்திருப்பதில் நிம்மதி அடைந்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

First published:

Tags: Stomach Pain, Viral News