ஆண்பாவம் படம்போல 6 வயது சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட ஸ்டீல்குடம் - 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெட்டி எடுப்பு

குடம்

ஆண்பாவம் படத்தில் வந்த காட்சிபோல 6 வயது சிறுவனின் தலையில் ஸ்டில் குடம் மாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  பிரபல தமிழ் திரைப்படமான ஆண்பாவம் படத்தில் வருவது போன்ற காட்சி தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள சங்கர பட்டினத்தை சேர்ந்த ராஜூ - காவியா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனது தங்கையுடன் விளையாடி கொண்டிருக்கும்போது அவர்களில் ரோகித் தலையில் ஸ்டீல் குடம் மாட்டி கொண்டு வரவில்லை. நீண்ட நேரமாக முயற்சி செய்தும் குடம் வராத நிலையில் பெற்றோர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.


  பின்னர், காவல்துறையினர் தீவிர முயற்சிக்குப் பிறகு குடத்தை கட்டர் மூலம் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெட்டி தனியாக பிரித்து 6 வயது சிறுவனை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளதால் பள்ளி திறக்கப்படாத நிலையில் குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: