ஏர் சார்ட்டர் சர்வீஸ் இந்தியா (ACS) ஆல் நிருவகிக்கப்படும், ஸ்டார் ஏர் விமானம் 27 இளம் புற்றுநோயாளிகளை (8 முதல் 14 வயது வரை) மகிழ்விக்கும் வகையில் ஒரு அற்புதமான விஷயத்தைச் செய்துள்ளது.
இந்த இளம் புற்றுநோயாளிகளுக்கு நல்ல வான்வெளி அனுபவத்தைத் தர அவர்களை விமானத்தில் இலவசமாக அழைத்துச் சென்று ஒரு சிறந்த பரிசாக அந்த தருணத்தை மாற்றி உள்ளனர். மேலும் இந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்தனர்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (CSMIA) ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்த இளம் புற்றுநோயாளிகள் முதல் முறையாக விமானத்தில் பறந்தனர். அகில இந்திய மகிளா எம்பவர்மென்ட் அமைப்பு, புற்றுநோய் நோயாளிகளுக்கான உதவி சங்கம் மூலம் விமானப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இந்த ஏற்பாடானது 'நல்ல தன்மையுடன் கூடிய வளர்ச்சி' என்கிற சலுகையின் கீழ் செய்யப்பட்டது என்று CSMIA அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Also Read : என்னது... சமோசா, ஜிலேபி இந்திய உணவு இல்லையா? வேறு எந்தெந்த உணவுகள்
இந்த இளம் பயணிகள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன், CSMIA இன் டெர்மினல் 1-இல் இருந்து புறப்பட்டனர். மேலும் இவர்களுக்கு விமானத்திற்குச் செல்வதற்கு முன் ஆச்சரியமான பரிசுகள் மற்றும் சிற்றுண்டிகள் உட்பட பல்வேறு சிறப்புச் சேவைகளை வழங்கினர். இந்த நிகழ்வு குறித்து CSMIA செய்தித் தொடர்பாளர் கேட்டபோது, "பயணிகளுக்கு ஒரு மறக்கமுடியாத பயண அனுபவத்தை உறுதி செய்வது CSMIA மும்பையின் செயல்பாடுகளின் மையத்தில் எப்போதும் இருந்து வருகிறது" என்று கூறினார்.
"விமானத்தில் பயணம் செய்யக் கூடிய பயணிகள் சிறப்புக் குழந்தைகளாக இருக்கும்போது, அவர்களின் முதல் விமான பயணத்திற்கு முன்னும் பின்னும் அவர்கள் ஒரு சிறந்த தருணத்தைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய நாங்கள் அனைவரும் பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. மேலும் இந்த அசாதாரணமான துணிச்சலான குழந்தைகளுக்கு உற்சாகத்தை அளிக்கும் இந்த முயற்சியை ஆதரிப்பதற்கு நாங்கள் பாக்கியம் பெற்றுள்ளோம்." என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Flight travel