ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வாட்ஸ் அப் டவுன்.. இவரு சொன்னது அப்படியே நடந்துடுச்சு.. ஆச்சரியமளித்த பெண்!

வாட்ஸ் அப் டவுன்.. இவரு சொன்னது அப்படியே நடந்துடுச்சு.. ஆச்சரியமளித்த பெண்!

ஸ்டாண்ட்அப் காமெடியன் சிந்து வீ

ஸ்டாண்ட்அப் காமெடியன் சிந்து வீ

எதிர்காலத்தைக் கணித்த ஸ்டாண்ட்அப் காமெடியன் சிந்து வீ -வின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஸ்டாண்ட்அப் காமெடியன் சிந்து வீ, டிவிட்டரில் வாட்ச் அப் முடக்கம், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்றவர்களைப் பற்றிக் கணித்து குறியது அப்படியே நடந்த நிலையில் அவரின் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடியவர்களை மந்திரவாதி, சாமியார் எனப் பல பெயர்களை வைத்து அழைப்போம். சாமானிய மனிதர்கள் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வது என்பது மிக, மிக அபூர்வமானது. பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் முதல் பல்கேரிய ஆன்மீகவாதி பாபா வங்கா வரை பலரும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் பிரபலமானவர்களாக உள்ள நிலையில், தற்போது ஸ்டாண்ட்அப் காமெடியன் ஒருவரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராகச் சமீபத்தில் பதவியேற்ற லிஸ் ட்ரஸ், பொருளாதார பிரச்சனைகளைச் சரி செய்ய முடியாத காரணத்தால் கடந்த 20ம் தேதி தனது ராஜினாமாவை அறிவித்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவர் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளது இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீபாவளி அன்று இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், அடுத்த நாள் உலகம் முழுவதும் வாட்ஸ் அப் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் செயலிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த இரண்டு விஷயங்களும் நடக்கும் எனப் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆக வலம் வரும் சிந்து வீ என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரின் பதிவில் , "ஹெட்ஸ் அப்: நாளை ஒரு பில்லியன் இந்தியர்களுக்குத் தீபாவளியும் கொண்டாட்டத்திலும், இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் அறிவிப்பும் வெளியாகும் சமயத்தில் வாட்ஸ்அப் செயலிழக்கும்” என ட்வீட் செய்துள்ளார்.

அதேபோல் அக்டோபர் 25ம் தேதி ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். அன்றைய தினம் தான் உலகம் முழுவதும் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் செயலிழந்தது. தற்போது சிந்து வீ எப்படி துல்லியமாக ட்வீட் செய்திருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்படி சிந்துவால் இவ்வளவு சரியாகக் கணிக்க முடிந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read : நாசா வெளியிட்ட சிரிக்கும் சூரியன் படம் - எமோஜி போல் இருக்கும் சூரியன்!

சமூக வலைத்தளத்தில் சிந்து வீ-யின் டிவிட்டர் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வரும் அதே சமயத்தில் ஏராளமான கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

நாளைக்கான நிஃப்டி க்ளோஸ் விலையை சொல்லுங்க... அடுத்து நடக்க உள்ள விளையாட்டு போட்டிகளில் யார் வெல்வார்கள் என்பது பற்றி தெரியுமா? என பல்வேறு வகையான கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

சிந்து வெங்கடநாராயணன் என்பவர் இந்தியாவை சேர்ந்த பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் ஆவார். இவர் ஐரோப்பாவில் பல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

Published by:Janvi
First published:

Tags: Twitter, Viral News