Home » News » Trend

"My name is Mrs. Janaki" - இன்ஸ்டாகிராம் தமிழர்களை கொள்ளையடித்த சென்னை ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக்..

கற்பனையாக உருவாக்கிய ஜானகி டீச்சர் கதாபாத்திரமாக மாறியதுதான் அபிஷேக் குமாரின் டர்னிங் பாய்ண்ட்.

ஜானகி டீச்சர் - அபிஷேக் குமார்
  • Share this:
தங்கையிடம் இருந்தும், அம்மாவிடம் இருந்தும் சுடிதார் வாங்கிப்போட்டுக்கொண்டு, கற்பனையாக உருவாக்கிய ஜானகி டீச்சர் கதாபாத்திரமாக மாறியதுதான் அபிஷேக் குமாரின் டர்னிங் பாய்ண்ட்.

My name is Janaki teacher என்று தொடங்கும் இன்ஸ்டகிராம் வீடியோ வைரலானதன் ரகசியத்தை The HinduMetroplus-க்கு பகிர்ந்திருக்கிறார் ஸ்டாண்ட் அப் காமெடியனும், எழுத்தாளருமான அபிஷேக் குமார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு ரத்தானதால் ஆன குஷிக்கு, ஒரு ஸ்ட்ரிக்டான டீச்சர் எப்படி அலட்டிக்கொள்வாரோ அப்படியே ஒரு அக்மார்க் டீச்சரை ஜானகி டீச்சர் வடிவில் கொண்டு வந்து நிறுத்தியதும், அவரது உச்சரிப்பும் தான் இந்த வைரல் வீடியோவின் சக்ஸஸ் ஃபார்முலா.






கிரகணம் வந்து கொரோனாவை அழித்துவிடும் என்று நம்புவதும், வீட்டில் வாங்கி வைத்த சைனா தயாரிப்புகளை போட்டு உடைத்து தேசபக்தியைக் காட்டுவதையும், Face App-இல் முகம் மாற்றும் ரகளையும், தமிழ்நாட்டு மாவட்டங்களுக்கு பெயர் மாற்றியதையும்  அசால்ட்டாக கேலி செய்து பதம் பார்க்கிறது அபிஷேக்கின் உடல் மொழி.




திட்டு வாங்கிக்கொண்டாலும் சாக்லேட் வாங்கிக்கொடுக்க ஆசைப்படும் மாணவ மனங்களால், 5000-ஆக இருந்த அவரது இன்ஸ்டகிராம் ஃபாலோயர் எண்ணிக்கை 17,000-ஆக உயர்ந்திருக்கிறது.

இது அபிஷேக் குமாரோட இன்ஸ்டாகிராம் ஹேண்டில், அவருடைய மொழியில் சொல்லணுமா?

Do Koothadichufy.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading