• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஓரியோ பிஸ்கட்டில் பக்கோடா..! தெரு கடைகளில் பேமஸாகும் ரெசிபி

ஓரியோ பிஸ்கட்டில் பக்கோடா..! தெரு கடைகளில் பேமஸாகும் ரெசிபி

ஓரியோ பிஸ்கட்டில் பக்கோடா

ஓரியோ பிஸ்கட்டில் பக்கோடா

அதில் பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினாலும், அதன் ருசி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அதை சாப்பிட விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.

  • Share this:
    உணவு என்பது நம் ஒவ்வொருவருக்கும் பிடித்த ஒரு விஷயம். அதிலும் துரித உணவுகள், தின்பண்டங்கள் என எக்கச்சக்க விருப்பங்கள் உள்ளன. அதேபோல கடைகளில் விற்கப்படும் கேக் மற்றும் பிஸ்கட் வகைகளை சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பிஸ்கட் வகை தான் ஓரியோ. மேலும், ஓரியோவை வைத்து கேக், மில்க்ஷேக் போன்ற ருசியான பல டிஷ்களை சமைத்து சாப்பிடுவர்.

    கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட ஓரியோ கேக்குகள் மிக பிரபலமடைந்தன. பொதுவாக, இந்த புதுமையான ரெசிபிகளை ருசி பார்க்க மக்களுக்கு உற்சாகமாகவும், ஆசையாகவும் இருக்கும். ஆனால், தற்போது ஓரியோ பிஸ்கட்டை வைத்து செய்யப்பட்டு வரும் ஒரு புதிய டிஷ் மக்களின் முகத்தை சுழிக்க வைத்துள்ளது. ஓரியோ பிஸ்கட்டை வைத்து செய்யப்படும் பக்கோடா தான் அது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ஒரு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் " ஓரியோ பக்கோடா. அகமதாபாத் தெரு உணவு. அகமதாபாத் பிரபலமான உணவு. தனித்துவமான தெரு உணவு. வித்தியாசமான தெரு உணவு” என தலைப்பிடப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வெறுப்பைகளையே சம்பாதித்துள்ளது. பலர் இப்படி ஒரு உணவை எவ்வாறு சமைத்து சாப்பிடுகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.



    இது போன்ற வினோதமான உணவுகள் பல இணையத்தில் பலரின் விமர்சங்களை பெறுவதுண்டு. அதேபோல, மேகி நூடுல்ஸை வைத்து விதிவிதமாக சமைத்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதுதொடர்பான பல வீடியோக்கள் கூட இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. அந்த வகையில் மேகி வைத்து தயார் செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான டிஷ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த உணவு மேகி பிரியர்களுக்கு பிடித்திருந்தாலும், பல நெட்டிசன்கள் அதை எப்படி சாப்பிடத் தோன்றுகிறது என பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.



    மேகியை வைத்து அப்படி என்ன செய்திருப்பார்கள் என்று பார்த்தால், வைரலான புகைப்படத்தில் இருந்தது மேகி மில்க் ஷேக். மில்க் ஷேக் மேல் சமைக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் இருந்ததை பார்ப்பதற்கு உண்மையில் நன்றாக இல்லை. இந்த படம் இப்போது ட்விட்டரில் பரவி வருகிறது மற்றும் யூசர்களின் மாறுபட்ட ரியாக்சன்களை குவித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த ட்வீட் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான லைக்குகளையும் ரியாக்ஷன்களையும் பெற்று வருகிறது.

    அதில் பலர் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினாலும், அதன் ருசி எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அதை சாப்பிட விரும்புவதாக தெரிவித்திருந்தனர். பிடிக்கும் என்பதற்காக இப்படியெல்லாமா யோசிப்பாங்க என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: