ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பட்டம் விடும்போது ஏற்பட்ட விபரீதம்... பறந்த இளைஞர் - வைரலாகும் வீடியோ

பட்டம் விடும்போது ஏற்பட்ட விபரீதம்... பறந்த இளைஞர் - வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மற்றவர்கள் கயிற்றை விட, கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் சுதாரித்துக்கொள்ளாமல் பட்டத்தோடு வானில் பறந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சுமார் 40 அடி உயரத்தில் பட்டதோடு வானில் பறந்த இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  இலங்கையில் நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்ட இளைஞரை, அந்த பட்டமே தூக்கிச் சென்றது. பொங்கல் திருநாளில், யாழ்ப்பாணம் பகுதி மக்கள் பட்டம் விட்டு பண்டிகையை கொண்டாடுவர். இந்த நிலையில், பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், ஜாப்னா (Jaffna) பகுதி இளைஞர்கள் ராட்சத பட்டத்தை தயார் செய்தனர்.

  அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மற்றவர்கள் கயிற்றை விட, கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் சுதாரித்துக்கொள்ளாமல் பட்டத்தோடு வானில் பறந்தார். சுமார் 40 அடி உயரத்தில் பறந்த அவரை பார்த்து, கீழே இருந்த நண்பர்கள் "கையை விடுடா" என கூச்சலிட்டனர்.

  காற்றின் வேகம் குறைந்ததையடுத்து பட்டம் கீழே இறங்க, இளைஞர் காயமின்றி உயிர் தப்பினார்.

  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் தங்கள் இணையதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Viral Video