இணையத்தில் அடிக்கடி வெளியாகி வரும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தற்போது நெட்டிசன்களுக்கு சவாலான விஷயமாக மாறிவிட்டன. எனவே நெட்டிசன்களுக்கு ஆப்டிக்கல் இல்யூஷன் மேல் இருந்து வந்த தேடல், தற்போது வெறியாகவே மாறிவிட்டது என சொல்லலாம். ஏனெனில் இன்று புதிதாக என்ன ஆப்டிக்கல் இல்யூஷனை பார்ப்போம், அதில் இருக்கும் புதிரை எப்படி கண்டுபிடிப்போம் என இணையத்தில் தீவிரமாக தேடும் அளவிற்கு உள்ளனர்.
பல உளவியலாளர்கள் இந்த படங்கள் அல்லது ஓவியங்கள் மனதில் ஒரு நேர்மறையான விளைவுகளை உருவாக்குதாகவும் கூறுகின்றனர். தற்போது ஆளுமை திறன், உருவங்களை கண்டுபிடிப்பது அல்லது எண்ணிக்கையை சொல்வது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன்களை விட கண்ணையும், மூளையையும் குழம்ப வைக்க கூடிய அளவிற்கு மிகவும் சிக்கலான ஆப்டிக்கல் இல்யூஷன்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக நமது மூளையின் செயல்திறனை சோதிக்கும் வகையிலான ஆப்டிக்கல் இல்யூஷன்களை தான் நெட்டிசன்கள் அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இன்றைய ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்டில் உங்கள் மூளைக்கு சவால் விடக்கூடிய ஒன்றை கொண்டு வந்துள்ளோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து சவாலை 9 விநாடிகளுக்குள் முடிக்கப்பாருங்கள்.
திருமண பரிசாக இது மட்டுமே வேண்டும்... மணப்பெண் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விருந்தினர்கள்!
இந்த ஆப்டிக்கல் இல்யூஷனில் இரண்டின் பெரிய ஆரஞ்சு வட்டத்தை அடையாளம் காணும் படி நெட்டிசன்களிடம் கேட்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியை தழுவியுள்ளனர். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்பதையும் ஒருமுறை முயன்றுபாருங்கள்.
இரண்டு ஆரஞ்சு வட்டத்தில் எது பெரியது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான சில விதிமுறைகளையும் நாங்கள் கொடுத்துள்ளோம்.
- படத்தைப் பார்க்கும் முன் 5 வினாடிகள் கண்களை மூடுங்கள்.
- இப்போது உங்கள் கண்களைத் திறந்து, பெரிய வட்டத்தைக் கண்டறிய முயலுங்கள். இதற்கு 9 வினாடிகள் தருகிறோம்.
- சரியான பதிலை கண்டுபிடித்தாலும், கண்டறியாவிட்டாலும் கீழே உள்ள விடையை சரிபாருங்கள்.
ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் எந்த வட்டம் பெரியது?
இரண்டாவதாக வலதுபுறம் உள்ள வட்டம் பெரியது என்றும் நினைக்கிறீர்களா? நீங்கள் மட்டும் அப்படி நினைக்கவில்லை. உண்மையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையைப் பார்க்கும் 90% க்கும் அதிகமான மக்கள் இரண்டாவது வட்டம் அல்லது வலதுபுறம் இருக்கும் வட்டம் தான் இடதுபுறத்தை விட பெரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் இரண்டு வட்டங்களுமே ஒரே அளவிலானவை தான்.
இது Ebbinghaus illusion அல்லது Titchener circles என்று அழைக்கப்படுகிறது. ஆழம் மற்றும் ஒப்பீட்டு அளவு பற்றிய அனுமானங்களை நாம் எவ்வாறு மேற்கொள்கிறோம் என்பதைப் பற்றிய ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும்.
இது எவ்வாறு செயல்படுகிறது என்பது புரிகிறதா?
நமது மூளை கடந்த காலத்தில் அனுபவித்தவற்றைப் பார்க்கப் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதால், அந்த நேரத்தில் உண்மையான சூழ்நிலைகளை நாம் உணரத் தவறுகிறோம். இதே தான் ஆப்டிக்கல் இல்யூஷன் விஷயத்திலும் நடக்கிறது. மேலே உள்ள படத்தில், வலது புறமுள்ள ஆரஞ்சு நிற வட்டத்தை சுற்றிலும் நிறைய சம்பல் நிற வட்டங்கள் உள்ளன. அந்த சிறிய வட்டங்களின் தாக்கத்தால் வலதுபுறம் உள்ள வட்டம் பெரிதாக தோன்றுகிறது. இடது ஆரஞ்சு வட்டம் பெரிய சாம்பல் வட்டங்களால் சூழப்பட்டுள்ளது, எனவே தான் அது நமது கண்களுக்கு சிறியதாக தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion