இன்றைக்கு ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் இணைய வாசிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையத்தைப் பொழுதுப்போக்கு அம்சத்திற்காக மட்டும் இல்லாமல் அறிவுப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றது தான் இந்த ஒளியியல் மாயைப் புதிர்கள். புகைப்படத்தில் மறைந்திருக்கும் புதிய விஷயங்கள் என்ன? என்பதை நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடித்துவீட்டீர்கள்? என்றால் அதிலிருந்து உங்களின் ஆளுமைத் திறன், மூளையின் செயல்திறன் எந்தளவிற்கு உள்ளது? எனபதை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். இவ்வாறு புதிர் போடும் புகைப்படங்களில் சில நமது கண்களுக்கும், மூளைக்கும் சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.
இதுப்போன்ற ஒரு புகைப்படம்தான், தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மற்றவைகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த ஒளியியல் மாயைப் புகைப்படங்களின் மூலம் உங்களின் IQ திறனை நீங்கள் சோதித்துக் கொள்ளலாம். இதோ என்ன உள்ளது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
மூளையின் செயல்திறனைச் சோதிக்கும் ஒளியியல் மாயைப் புகைப்படம்:
நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் யானை ஒன்று நிற்பது போன்று நமக்கு தெரியும். இதில் தான் புதிர் கேள்வி உள்ளது. பார்ப்பதற்கு யானைப் போன்று தோன்றினாலும், அதற்குள் சில விலங்குகளின் ஒளிந்திருக்கிறது. பல வகையான விலங்குகளுக்குள் தான் யானையின் தோற்றம் போன்று நமக்கு கண்களுக்குத் தெரிகிறது.
15 வினாடிகளில் யானைக்குள் எத்தனை விலங்குகள் உள்ளது?
தற்போது இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தில் 17 வகையான விலங்குகளின் உருவங்கள் உள்ளது. இதில் நீங்கள் 15 விநாடிகளுக்குள் எத்தனை விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பது தான் கேள்வி. நீங்கள் இப்ப டிரை பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? எத்தனை விலங்குளை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. சற்று நிதானமாக யோசித்துப்பாருங்கள். என்ன விலங்குகள் உள்ளது? என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் உங்களின் மூளையின் செயல்திறன் எப்படி உள்ளது? என தெரிந்துக் கொள்ளலாம்.
Also Read : உங்களால் முடியுமா? மறைந்திருக்கும் கார் சாவியை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடிங்க!
நீங்கள் 15க்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டுபிடிக்க முடிந்தால் உங்களின் மூளையின் செயல்திறன் சிறப்பாக உள்ளது என அர்த்தம்.
அதே 10 க்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டுபிடிக்க முடிந்தால் உங்கள் மூளை நல்ல நிலையில் உள்ளது. 5 அல்லது ஆறு விலங்குகளை மட்டும் கண்டுபிடிக்க முடியும் என்றால், உங்களின் மன நிம்மதியில்லாமல் உள்ளது எனவும் இதற்காக சில உதவிகள் தேவை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களின் IQ அளவை நீங்களே சோதித்துக் கொள்ள முடியும்.
இந்த கேள்விக்கான விடையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா? இதோ உங்களுக்கான பதில் இங்கே..
போவா பாம்பு, சிலந்தி, ரக்கூன், ஆமை, சீல், ஸ்க்விட், முயல், வௌவால், மாண்டா ரே, அணில், பட்டாம்பூச்சி, ஜாகுவார், கரடி, கங்காரு, குரங்கு, பாய்மர மீன், இறுதியாக யானை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Optical Illusion