கைலாசா தேசத்துக்கான விசா நடைமுறை என்ன?- அஷ்வின் கேள்விக்கு ட்விட்டர்வாசிகளின் பதில்!

நித்தியானந்தாவின் கைலாசா தேசத்துக்கு வழிகேட்டு வைரலாகி உள்ளார் அஷ்வின்.

கைலாசா தேசத்துக்கான விசா நடைமுறை என்ன?- அஷ்வின் கேள்விக்கு ட்விட்டர்வாசிகளின் பதில்!
கைலாசா
  • News18
  • Last Updated: December 7, 2019, 10:56 AM IST
  • Share this:
நித்தியானந்தாவின் கைலாசா தேசத்துக்கான விசா நடைமுறைகள் குறித்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கேள்வி எழுப்ப அதற்கு ட்விட்டர்வாசிகள் அளித்து வரும் பதில்கள் வைரலாகி வருகின்றன.

கேலியான விமர்சனங்களை ட்விட்டரில் வழக்கமாக முன்வைத்துவருபவர் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். உலக அரசியல் முதல் உள்ளூர் நிகழ்வுகள் வரையில் பலவற்றையும் நகைச்சுவையுடன் விமர்சனம் செய்துள்ளார். இம்முறை நித்தியானந்தாவின் கைலாசா தேசத்துக்கு வழிகேட்டு வைரலாகி இருக்கிறார் அஷ்வின்.Loading...

அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விசா வாங்குவதற்கான நடைமுறை என்ன? அல்லது நேரடியாக அங்கே சென்று இறங்கும் போது தருவார்களா கைலாசா” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நித்தியானந்தாவின் வைரல் வசனங்களையே பயன்படுத்தி கலாய்த்து வருகின்றனர் ட்விட்டர்வாசிகள்.

மேலும் பார்க்க: இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் பயோபிக்... தயாராகிறார் நடிகை டாப்ஸி!

 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...