• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • காலி விமானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு டான்ஸ் - சோஷியல் மீடியாவை கலக்கும் ஏர் ஹோஸ்டஸின் ரீல்!

காலி விமானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு டான்ஸ் - சோஷியல் மீடியாவை கலக்கும் ஏர் ஹோஸ்டஸின் ரீல்!

விமானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஏர் ஹோஸ்டஸ்

விமானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஏர் ஹோஸ்டஸ்

சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் இவரது இந்த ரீல் இதுவரை 93 ஆயிரத்திற்கும் அதிகமான வியூஸ்களை கடந்து உள்ளது.

  • Share this:
விமானத்தில் பணியாற்றும் குழுவினர் எத்தனை சலுகைகளை அனுபவித்தாலும், அவர்களின் வேலை அதிக கடின உழைப்பை கொண்டது. பயணிகளுடன் சேர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ந்து விமானத்திலேயே பறக்கும் அவர்களுக்கு, சமயத்தில் சரியான நேரத்தில் ஓய்வு கிடைக்காது, விமானிகள் மற்றும் பயணிகளுக்கு உதவ தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கும் அவர்கள் காலி விமானத்தை கண்டால் உற்சாகம் கொள்வது சகஜம் தானே.

சமீபத்தில் இண்டிகோ விமான பணிப்பெண் ஒருவர் "Manike Mage Hithe"என்ற பிரபல இலங்கை பாடலுக்கு பயணிகள் யாருமில்லாத காலி விமானத்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு விமான கேபின் டீமை உள்ளடக்கிய பல வேடிக்கை நடன கிளிப்புகள் இணையத்தில் வலம் வந்தது இந்நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான பணிப்பெண் ஒருவர் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானின் இசையில் காதலன் திரைப்படத்தில் வெளியான மெகா ஹிட் பாடலான "ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி பாலிசி" பாடலுக்கு விமானத்தின் நடைபாதையில் சூப்பராக டான்ஸ் ஆடியுள்ள வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஊர்வசி பாடலுக்கு காலி விமானத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிற சீருடையில் அசத்தலாக டான்ஸ் ஆடி இருக்கும் ஏர்ஹோஸ்டஸின் பெயர் உமா மீனாக்ஷி. இவர் தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் ஷேர் செய்து உள்ள ரீலில் எளிதாக எடுத்து கொள்ளுங்கள் என்று பொருள் கொண்ட ஆங்கில வார்த்தையான "TAKE IT EASY" என்று கேப்ஷன் கொடுத்து, தனது நம்பிக்கை மற்றும் அற்புதமான நடன திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஊர்வசி பாடலுக்கு மிகவும் அழகான உடல் அசைவையும், உற்சாகமான ஃபேஸ் ரியாக்ஷனையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். இவர் ஊர்வசி பாடலுக்கு காலி விமானத்தில் டான்ஸ் ஆடும் காட்சியை, அவரது கேபின் டீமை சேர்ந்த சக ஊழியர் ஒருவர் ரெக்கார்ட் செய்து இருக்கிறார்.

Also read... எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பெண் - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!



 




View this post on Instagram





 

A post shared by Uma Meenakshi (@yamtha.uma)






சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் இவரது இந்த ரீல் இதுவரை 93 ஆயிரத்திற்கும் அதிகமான வியூஸ்களை கடந்து உள்ளது. 7,500-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்று உள்ளது. சூப்பர், க்யூட், ஸோ பியூட்டிஃபுல், சூப்பர் டான்ஸ் உள்ளிட்ட பல வகையான பாராட்டும் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. ஏர்ஹோஸ்டஸ் உமா மீனாக்ஷியின் இன்ஸ்டா பேஜ்ஜிற்கு சென்று பார்த்தால் அவர் இது போன்ற ஏராளமான தனது டான்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே பயணிகள் யாருமில்லாத விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் உமா மீனாக்ஷி ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கு உற்சாகமாக டான்ஸ் ஆடி இருப்பதை காணலாம். இவரை இன்ஸ்டாவில் சுமார் 71 ஆயிரம் பேர் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: