Home /News /trend /

வீல் சேருடன் சாப்பிட சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியே அமர சொன்ன ரெஸ்டாரன்ட் ஊழியர்கள் - நெட்டிசன்கள் கண்டனம்

வீல் சேருடன் சாப்பிட சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியே அமர சொன்ன ரெஸ்டாரன்ட் ஊழியர்கள் - நெட்டிசன்கள் கண்டனம்

சிருஷ்டி பாண்டே

சிருஷ்டி பாண்டே

மூன்றாவது முறையாக அவர் கேட்டதற்கு வீல் சேருடன் செல்ல உள்ளே அனுமதிக்க முடியாது என்று என்னை பார்த்து கூறினார்கள்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் (gurugram) உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சக்கர நாற்காலியுடன் உணவருந்த சென்ற மாற்று திறனாளி இளம்பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பல நெட்டிசன்களை கோபமடைய செய்து இருக்கிறது. நண்பர்கள் சகிதம் வீல் சீருடன் குறிப்பிட்ட ரெஸ்டாரன்ட்டிற்கு சென்ற அந்த மாற்று திறனாளி இளம்பெண்ணை சாப்பிட உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளார்கள் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள். இதனை அடுத்து அந்த பெண் தான் எதிர் கொண்ட இந்த நிகழ்வை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய, அவருக்கு நாடு முழுவதும் உள்ள நெட்டிசன்கள் ஆதரவாக குரல் எழுப்பி அந்த ரெஸ்டாரன்ட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 22 வயது மாற்று திறனாளி இளம் பெண்ணான சிருஷ்டி பாண்டே (Shrishti Pandey) இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 12 அன்று ட்விட்டரில் ஷேர் செய்து இருப்பதாவது, " நேற்று இரவு எனது சிறந்த தோழி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சைபர் ஹப் (cyber hub) பகுதியில் உள்ள ராஸ்தா குர்கான் (Raasta Gurgaon) என்ற பிரபல ரெஸ்டாரன்ட்டிற்கு சென்றோம். பல வாரங்களுக்கு பிறகு முதல்முறையாக மிகவும் மகிழ்ச்சியாக இந்த அவுட்டிங்கிற்கு புறப்பட்டு சென்றேன்.ரெஸ்டாரன்ட்டிற்கு சென்ற பிறகு என் தோழியின் மூத்த சகோதரர் 4 பேர் அமர்ந்து சாப்பிட ஒரு டேபிள் கேட்டார். ஆனால் டெஸ்கில் இருந்த ஊழியர்கள் அவரை இரண்டு முறை புறக்கணித்தனர். பின்னர் மூன்றாவது முறையாக அவர் கேட்டதற்கு வீல் சேருடன் செல்ல உள்ளே அனுமதிக்க முடியாது என்று என்னை பார்த்து கூறினார்கள். அவரை வீல் சீருடன் உள்ளே அனுமதித்தால் ஏற்கனவே இங்கிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படும் என்று நேரடியாகவே என்னை பார்த்து கூறியதை கண்டு நாங்கள் அதிர்ந்தோம்.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு, எங்களை வெளியே உள்ள டேபிளை ஊழியர்கள் எடுத்து கொள்ள சொன்னார்கள். ஆனால் வெளியே கடுமையான குளிர். எப்படி எங்களால் அங்கே உட்கார முடியும். நான் ஏன் எப்போதுமே சிறிய விஷயங்களுக்காக கூட போராட வேண்டும்..? நான் ஏன் பொது இடத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை..? அப்படி என் நுழைவை மறுக்க அவர்கள் யார்..?

அபப்டி என்றால் நான் வெளியே செல்வதை நிறுத்த வேண்டுமா..? ஏனென்றால் நான் மற்றவர்களை பல இல்லையே.. நான் மற்றவர்களுக்கு ஒரு "தொந்தரவு". ஏனென்றால் என்னைப் பார்த்து அவர்களின் மனநிலை "பாழாகிவிடும்". நடந்த சம்பவத்தை நினைத்து என் மனம் உடைந்து போனது. மிகவும் வெறுப்பாக உணர்கிறேன் " என்று கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்ட சிருஷ்டியின் இந்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட ரெஸ்டாரன்டிற்கு பல்வேறு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் சீற்றத்தை கிளப்பியது.

Also read... ஜூபிட்டர் கிரகத்தில் 'பெப்பரோனி' புயல் - வைரலாகும் நாசா வீடியோ

சோஷியல் மீடியாவில் விஷயம் சீரியஸானதை தொடர்ந்து Raasta ரெஸ்டாரன்டின் நிறுவனர் மற்றும் பார்ட்னரான கௌமதேஷ் சிங், " எங்கள் ரெஸ்டாரன்டால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக மிகவும் வருந்துகிறோம். எந்த காரணத்திற்காகவும் யாரும் தனிமைப்படுத்தப்படுவதை ஒருபோதும் நாங்கள் விரும்ப மாட்டோம். இது போன்று இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, எங்கள் ஊழியர்களுக்கு சென்ஸிட்டிவிட்டி மற்றும் அனுதாப உணர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" அவரது ட்விட்டிற்கு பதில் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

கௌமதேஷ் சிங்கின் ட்விட்டிற்கு ரியாக்ட் செய்துள்ள நெட்டிசன்கள், ஒரு தனிநபரின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கைக்கு நீங்கள் ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். நீங்களும் உங்கள் ஊழியர்களும் அதை உணர்ந்தால், அதுவே சிறந்த மன்னிப்பு என்பது உள்ளிட்ட பல காட்டமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு அவரிடம் சீறி இருக்கிறார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி