Home /News /trend /

ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்!

ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்!

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

சொமேட்டோ போன்று இன்னும் பல நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த வீடியோவை ஒட்டி எழுந்துள்ளது.

  பொதுவாகவே மாற்றுத் திறனாளிகள் மீது சமூகத்தின் பொது பார்வை ஒன்று உண்டு, அவர்கள் உழைக்க தயங்குபவர்கள் என்பது தான் அது, ஆனால் உண்மை அது அல்ல. மாற்றுத்திறனாளிகள் சாதாரண மனிதர்களைப் போலவே, இன்னும் சொல்லப்போனால் சாதாரண மனிதர்களை விட கடுமையான பணிகளை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். அப்படியான ஒரு மாற்றுத்திறனாளி தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறார். சிரமங்கள் மற்றும் சவால்கள் முன்வைக்கப்படும் போதுதான், ​​ஒருவரின் ஆற்றல் அவரை போராடவும், பாடுபடவும், வெற்றிபெறவும் செய்கிறது. ஒரு சிறப்புத் திறன் கொண்ட மனிதனின் முழு தைரியமும், விடாமுயற்சியும் ஆன்லைனில் இதயங்களை வென்றுள்ளதென்றே நாம் சொல்லலாம்.

  உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோவின் டி-ஷர்ட் அணிந்து சக்கர நாற்காலியில் பயணிப்பதைக் காட்டும் கிளிப். இதில் சக்கர நாற்காலியின் பின்புறத்தில் உணவு விநியோக பையும் இணைக்கப்பட்டுள்ளது. அவர் பரபரப்பான தெருவில் சவாரி செய்வதை நாம் காணலாம். வீடியோவில் உள்ள வாசகம், "முடியாதது எதுவும் இல்லை, என்னால் முடியும் என்று உலகமே கூறுகிறது."

  "உத்வேகத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு" என்ற தலைப்புடன் க்ரூமிங் புல்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் வெளியிட்ட கிளிப் வைரலாகி 1,16,272க்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

  பல பயனர்கள் அந்த மனிதரைப் பாராட்டினாலும், சிலர் அந்த மனிதருக்கு வேலை கொடுத்ததற்காக Zomatoவைப் பாராட்டினர். "மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கியதற்காக Zomato சேவைக்கு ஒரு சல்யூட்" என்று ஒரு யூசர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "என் கண்ணீரை அடக்க முடியவில்லை." என பதிவிட்டுள்ளார்.

  உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அரிதான பிங்க் நிற வைரம்; விலை எவ்வளவு தெரியுமா?

  ஆன்லைனில் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்திற்கு பஞ்சமில்லை, மேலும் பலர் தங்கள் அர்ப்பணிப்பால் நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மாற்றுத்திறனாளி ஒருவர் சாலையோர உணவு வண்டியை நிர்வகிப்பது போன்ற வீடியோ ஆன்லைனில் இதயத்தைக் கவர்ந்தது. முழுமையாக உருவான கைகள் இல்லாத அந்த இளைஞர், தன் வண்டியில் வறுத்த நூடுல்ஸைத் திறமையாகத் தயாரித்து கொண்டிருந்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Grooming bulls (@groming_bulls_)


  சொமேட்டோ போன்று இன்னும் பல நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த வீடியோவை ஒட்டி எழுந்துள்ளது. காரணம் இவர்களால் வேலை செய்து பிழைக்க முடியாதா? என்று சொல்லும் நாம் தான்.

  அவர்களுக்கு எந்த வேலையும் வழங்காமல் ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு அவர்களை தள்ளுகிறோம். எனவே zomatoவை முன்மாதிரியாக கொண்டு இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணிகளில் மாற்றுத்திறனாளிகளை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது.

  அப்படி அவர்களை உட்படுத்தினால் நிச்சயமாக அது ஒரு சமூக நீதியாக இருக்கும். மேலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்று மேலெழுந்து வருவதற்கான ஒரு தருணமாகவும் அது அமையும்.

  இது போன்ற செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்றுவதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை.
  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral

  அடுத்த செய்தி