முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண் - பிரத்யேக வண்டியில் நகருக்குள் செல்லும் வீடியோ வைரல்!

உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண் - பிரத்யேக வண்டியில் நகருக்குள் செல்லும் வீடியோ வைரல்!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video | உலகில் எந்த மூலையில் என்ன சுவாரஸ்சியமான விஷயங்கள் நடந்தாலும் நொடியில் நம் கண்முன்னே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சோசியல் மீடியாக்கள். அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தங்களுக்காகவே உள்ள ப்ரத்யேக டூவிலரில் சென்று உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்ணின் வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒவ்வொருவரின் பொருளாதாரத் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்ன தான் ஒரு வீட்டில் ஆண்கள் வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளின் படிப்பு, குடும்ப தேவை, மருத்துவ செலவு என அனைத்தையும் சமாளிக்க முடியவில்லை. இச்சூழலில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இன்றைக்கு உள்ள சூழலில் ஒரு டூவிலர் இருந்தால் போதும், டெலிவரி ஏஜென்ட்களாக ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் அப்பணியை மேற்கொள்ளலாம். மிகவும் சவாலானப் பணியை சில சமயங்களில் நேர்த்தியாக கையாளும் உணவு டெலிவரி ஏஜென்ட்டுகளின் சுவாரஸ்ய விஷயங்கள் இணையத்தில் வைரலாகும்.

கடந்த சில மாதங்களாக “ மும்பையில் கொட்டும் மழைக்கு மத்தியில் குதிரையில் சவாரி செய்து உணவு டெலிவரி செய்தது, கால்கள் இல்லாத நிலையில் ஊன்றுகாலோடு உணவு டெலிவரி செய்த நபர், கையில் குழந்தையோடு டெலிவரி செய்யும் பெண்கள் என ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நிகழ்வுகளை நம்மால் இணையத்தில் பார்க்க முடிகிறது.

Read More : “என்ன வித்தயா காட்டுறீங்க“.? வெயிட்டர் இப்படித்தான் டஜன் கணக்கில் தட்டுக்களை சுமந்து செல்ல வேண்டுமோ.? வைரல் வீடியோ

இன்றைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில், உலகில் எந்த மூலையில் என்ன சுவாரஸ்சியமான விஷயங்கள் நடந்தாலும் நொடியில் நம் கண்முன்னே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சோசியல் மீடியாக்கள். அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. என்ன தான் வீடியோவில் இருந்தது? என்று நாமும் அறிந்துக் கொள்வோம்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவி ஸ்வாதி மாலிவால் தன்னுடைய ட்விட்டரில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஸ்வீக்கி டெலிவரி ஏஜென்டாக இருந்த மாற்றுத்திறனாளி பெண், தங்களுக்காக உள்ள ப்ரத்யேக டூவிலரில் அமர்ந்த படி பயணித்துள்ளார். தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சவாலான டெலிவரி ஏஜென்டாக பணியைத் தேர்வு செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் ஸ்விக்கி உணவு பையை டூவிலரின் பின்புறம் வைத்துக் கொண்டு அசால்டாக வண்டியை ஓட்டிச்செல்வது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6 நிமிட வீடியோவாக இருந்தாலும் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமானோர் வீடியோவை பார்த்துள்ள நிலையில் பல கமெணட்டுகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், அல்டிமேட், எங்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இனி நாங்கள் செய்யும் வேலை கடினமாக இருக்கிறது என்று ஒரு போதும் சொல்லமாட்டோம் என்பது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பெண்கள் நினைத்தால் எந்த கடினமானத் தொழிலையும் திறம்பட செய்து முடிக்கும் திறன் உள்ளது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார் இந்த மாற்றுத்திறனாளி பெண்.

First published:

Tags: Food Delivery App, Swiggy, Trending, Viral Video