ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டீ தயாரிப்பதில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண் - 1 மணி நேரத்தில் எவ்வளவு கப் தயார் செய்துள்ளார் பாருங்க?

டீ தயாரிப்பதில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண் - 1 மணி நேரத்தில் எவ்வளவு கப் தயார் செய்துள்ளார் பாருங்க?

டீ தயாரித்து கின்னஸ் உலக சாதனை

டீ தயாரித்து கின்னஸ் உலக சாதனை

1 மணி நேரத்தில் 249 கப் டீ தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. எனினும் அவருடைய ஆர்வம் தான் அவருக்கு உலக சாதனை என்ற கவுரவத்தை பெற்று தந்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உங்களால் 1 மணி நேரத்தில் எத்தனை கப் டீ தயாரிக்க முடியும் என்ற கேள்விக்கு பலரின் பதில் சுமார் 30-40 கப். ஆனால் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 1 மணி நேரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கப் டீ தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

  ஒரு மணி நேரத்தில் அதிக கப் டீ தயாரித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ள தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணின் பெயர் இங்கர் வேலன்டைன்(Ingar Valentyn). தென்னாப்பிரிக்க நாட்டின் வுப்பர்தால் (Wupperthal) என்ற நகரத்தை சேர்ந்த இந்த சாதனை பெண், ஒரு மணி நேரத்தில் சுமார் 249 கப் ரூயிபோஸ் டீ தயாரித்து இந்த புதிய உலக சாதனையை படைத்து உள்ளார்.

  தனது உலக சாதனை முயற்சிக்காக தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரத்தின் சிவப்பு மூலிகை தேநீரான ரூயிபோஸ் டீயின் 3 சுவைகளுடன் சுமார் 249 கப் டீ தயாரித்து அசத்தி உள்ளார் இங்கர் வேலன்டைன். ஒரிஜினல், வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி உள்ளிட்ட 3 சுவைகளை பயன்படுத்தினார். ஏற்கனவே படைக்கப்பட்ட உலக சாதனையை முறியடிக்க ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 150 கப் டீயை தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கர், அதை விட 99 கப் டீ அதிகம் தயாரித்து வியக்க வைக்கும் வகையில் உலக சாதனை படைத்து உள்ளார்.

  இங்கர் வேலன்டைன் எப்படியாவது உலக சாதனை படைக்க வேண்டும் என்ற வேகத்தில் ஒரு தெளிவான யுக்தியை மனதில் கொண்டு செயல்பட்டார். Guinness World Records அமைப்பு தெரிவித்துள்ள தகவலின்படி, இவர் ஒவ்வொரு Tea pot-டிலிலும் 4 டீ பேக்ஸ்களை வைத்தார். இதன் மூலம் 4 கப் தேநீர் தயாரித்ததாக கணக்கானது. இதற்கிடையே இங்கர் தயாரித்த டீ, சரியான மற்றும் தரமான ரூயிபோஸ் டீ என்ற தகுதி பெற, ஒவ்வொரு tea bag-ம் குறைந்தது 2 நிமிடங்களுக்கு ஊறவைக்கப்பட வேண்டும். உலக சாதனைக்கான முயற்சியில் தனது செயல்திறனை அதிகரிக்க இங்கர் வேலன்டைன் விரைவாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

  Guinness World Records அமைப்பு இந்த உலக சாதனை முயற்சியின் போது உணவை வீணாக்காத கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இங்கர் வேலன்டைன் தயார் செய்த டீ-யை அருந்த உள்ளூர் மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் அடங்கிய குழுவை தயார் செய்திருந்தது. எனினும் இதனால் இங்கருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. தான் தயார் செய்யும் டீ-யை ஊற்றி வைக்க சுத்தமான டீ கப் இல்லாத நிலை ஒருகட்டத்தில் ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த டீ அருந்திய மாணவ, மாணவிகள் தாங்கள் குடித்த டீ கப்பைகளை கழுவி அவருக்கு உதவினர்.

  மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 1 மணி நேரம் முடிந்த பின் நீங்கள் எவ்வளவு கப் டீ ரெடி செய்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 170 கப் இருக்கலாம் என்று கூறிய Ingar Valentyn, உண்மையில் தான் தயார் செய்தது 249 கப் டீ என்று தெரிந்ததும் மிகவும் உற்சாகம் அடைந்தார். 1 மணி நேரத்தில் 249 கப் டீ தயாரிப்பது எளிதான காரியம் அல்ல. எனினும் அவருடைய ஆர்வம் தான் அவருக்கு உலக சாதனை என்ற கவுரவத்தை பெற்று தந்துள்ளது என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

  Read More: உங்கள் காதலில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் – இந்த ஆப்டிகல் இல்யூஷன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

   உண்மையில் ஒரு மணி நேரத்தில் 250 கப் டீ தயாரித்தார் Ingar Valentyn. இருப்பினும் இதில் 1 கப் குறைந்தபட்ச அளவு தேவையான 142 மில்லியுடன் பொருந்தாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இறுதியாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 249-ஆக இருந்தது. இந்த சாதனையின்படி அவர் நிமிடத்திற்கு 4 கப்களுக்கு மேல் டீ தயார் செய்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Viral News