ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தென்னாப்பிரிக்க பெண்ணின் வினோத முயற்சி.. ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை.!

தென்னாப்பிரிக்க பெண்ணின் வினோத முயற்சி.. ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை.!

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

Guinness World Record | தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிமானிலா என்ற பெண்மணி, ஒரு நிமிடத்தில் 120 கோழிக்கால்களைச் சாப்பிட்டு உலக சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த வினோத முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். இதற்காக முறையானப் பயிற்சியை எடுக்கும் பலரை நாம் சந்தித்திருப்போம். ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல், ஏற்கனவே தன்னிடம் உள்ள திறமையைப் பயன்படுத்தி சாதித்தால் எப்படி இருக்கும்? அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது அல்லவா.. இப்படித்தான் தென்னாப்பிரிக்காவில் சாப்பிடும் போட்டியில் கலந்துக் கொண்ட பெண்மணி ஒருவர், ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களைச் சாப்பிட்டு கின்னஸ் சாதனைப் படைத்துள்ளராம்.. எப்படி இந்த போட்டியில் களம் இறங்கினார். என்ன தான் விசித்திரமாக அங்கு நடந்தது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள உம்லாசி நகரில் ஷாம்ப்ளேன்ஸ் வுஞ்ச் என்ற உணவகம் மற்றும் மதுபான விடுதி ஒன்று தன்னுடைய ஐந்து ஊழியர்களை கோழிக்கால் சாப்பிடும் போட்டியில் விளையாடுவதற்கு களமிறக்கியது. இந்த போட்டி விதியின் படி, ஒரு நபர் ஒரு நேரத்தில் , ஒரு கோழி கால் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பல கால்களை ஒரே நேரத்தில் எடுப்பது என்பது தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் என்ற நடைமுறை உள்ளது. இந்த போட்டியில் சோபியா கிரீனேக்ரா நடுவராக பங்கேற்றார். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக நடுவர் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தனித்தனியாக 300 கிராம் கோழிக்கால்களை தட்டில் வைத்தார்.

போட்டி விதியின் படி 60 நிமிடத்தில் தட்டில் வைக்கப்பட்டுள்ள 300 கிராம் கோழிக்கால்களை சாப்பிட வேண்டும். இதற்கான நேரம் தொடங்கியதும் போட்டியாளர்கள் செம குஷியில் சாப்பிட ஆரம்பித்தார்கள். வேகவேகமாக கோழிக்கால்களை சாப்பிட்ட போட்டியாளர்கள் ஒரு கட்டத்தில் சாப்பிட முடியாமல் திக்குமுக்கு ஆடியுள்ளனர். ஆனால் இந்த போட்டியில் பங்கேற்ற வுயோல்வெது சிமானிலே என்ற பெண் மட்டும் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தார். ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு முன்னால் 300 கிராம் கோழிக்கால்களை வைத்த நிலையில், சிமானிலே என்ற பெண் மட்டும் 60 வினாடிகளில் 120 கிராம் கால்களை உட்கொண்டு புதிய உலக சாதனைப் படைத்தார். இவர் மற்ற போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிட்டிருந்த நிலையில் கின்னஸ் சாதனைப் பெற்றுள்ளார்.

அசால்ட்டாக ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களைச் சாப்பிட்ட சிமானிலே,  ‘நான் போட்டியில் வெற்றி பெற்றதையும், கின்னஸ் சாதனைப் பெற்றதையும் என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். மேலும் தனக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் கிடைத்தப் பிறகு தான் நம்பவே முடிந்தது என கூறியுள்ளார். சாப்பிடும் போட்டி என அலட்சியமாக இல்லாமல், எந்தவொரு விஷயத்திலும் முயற்சி இருந்தால் நிச்சயம் வென்று விடலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளார் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிமானிலே.

Published by:Selvi M
First published:

Tags: Guinness, Trending, Video, World record