“தாதா உங்கள் மகளுக்கு 18 வயது“ குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் கங்குலியை விளாசும் நெட்டிசன்கள்

Sourav Ganguly | Sana Ganguly | CAA | சவுரவ் கங்குலியின் மகள் சனா இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

“தாதா உங்கள் மகளுக்கு 18 வயது“ குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் கங்குலியை விளாசும் நெட்டிசன்கள்
  • News18 Tamil
  • Last Updated: December 19, 2019, 10:33 AM IST
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் என் மகளுக்கு அரசியல் புரியும் வயதில்லை என்ற கங்குலியின் பதிவிற்கு நெட்டிசன்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டதுக்கு எதிராகவும், ஜமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், ரஜினிகாந்த், சச்சின், சவுரவ் கங்குலி, ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான் கான் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்கள் இந்த விவகாரங்களில் இதுவரையில் எந்த கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை.

இந்தநிலையில், பி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் மகள் சனா இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


அதில்“இந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் இல்லாததன் காரணமாக நாமெல்லாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்“ என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் குறிப்பை பதிவு செய்திருந்தார்.சனா கங்குலியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், தயவுசெய்து இந்த எல்லா பிரச்சினைகளிலிருந்தும் சனாவை ஒதுக்கி வைக்கவும். இந்த பதிவு உண்மையல்ல. அரசியலில் எதையும் பற்றி தெரிந்து கொள்ளும் வயது அவருக்கு இல்லை“ என்று பதிவிட்டார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் கங்குலியின் இந்த பதிவு அவர்களுக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சனாவின் தைரியத்தை பாராட்டியும் உங்களின் அரசியலுக்காக அவரின் பதிவை கொச்சப்படுத்த வேண்டாம் என்றும் கங்குலியை விமர்சித்து வருகின்றனர்.மேலும் உங்கள் பெண்ணுக்கு 18 வயதாகி விட்டது. உங்கள் பெண்ணிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
First published: December 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading