• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Boss-க்கு தன் ராஜினாமாவை வித்தியாசமாக தெரிவித்த பெண் - வைரலாகும் போஸ்ட்!

Boss-க்கு தன் ராஜினாமாவை வித்தியாசமாக தெரிவித்த பெண் - வைரலாகும் போஸ்ட்!

 தன் ராஜினாமாவை வித்தியாசமாக தெரிவித்த பெண்

தன் ராஜினாமாவை வித்தியாசமாக தெரிவித்த பெண்

தொடர்ந்து அந்த கார்டின் உள்ளே “அது நான் தான். நான் இன்னும் 2 வாரங்களில் புறப்படுகிறேன்” (It is me. I leave in two weeks) என்று தனது இரண்டு வார நோட்டீஸ் பீரியட்டை வேடிக்கையாக அதே சமயம் Boss-ஐ பழிவாங்கும் முறையில் அறிவித்து இருக்கிறார்.

  • Share this:
அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் உயரதிகாரி அல்லது முதலாளிகளின் நடத்தை மற்றும் செயல்களால் மகிழ்ச்சியற்ற மனநிலையில் தான் காணப்படுகிறார்கள். ஒரு சிலர் அலுவலக வேலைக்கு செல்வதை கல்லூரிக்கு செல்வது போல எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றாலும், பலருக்கு நிலைமை தலைகீழாக தான் இருக்கிறது. சொந்தமாக பிசினஸ் செய்ய போதுமான நிதி இல்லாமல் இருப்பது மற்றும் குடும்ப சுமையை சமாளித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளிட்ட பல காரணங்களால் வேறுவழியின்றி விருப்பமில்லாத துறை அல்லது வேலையாக இருந்தாலும் கூட பல வருடங்களாக செய்து குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இது உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான விஷயமாகி விட்டது. சில சந்தர்ப்பங்களில் நேர்மையாக மற்றும் கடினமாக உழைக்கும் ஊழியர்கள் தங்களது உயரதிகாரி அல்லது முதலாளிகளுடன் இயல்பான உறவை கடைபிடிக்க முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் உள்ள ஊழியர்களுக்கான சரியான பழமொழி "மக்கள் மோசமான வேலைகளை கூட விட்டுவிட மாட்டார்கள், ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கும் போது மோசமான முதலாளிகளை விட்டுவிடுவார்கள்."

தனது மேலதிகாரியால் விரக்தியடைந்த ஒரு பெண் பெண் ஊழியர் தான் விரைவில் அவர் நிறுவனத்தின் வேலையை விட்டு விலக உள்ளதை மிகவும் வித்தியாசமான கடிதம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். தனது Boss-ன் செயலால் மிகவும் விரக்தி மற்றும் சோர்வடைந்திருந்த அம்பர் (Amber) என்ற பெயருடைய அந்த பெண், எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வருகிறார். இவரை அவரது Boss மிகவும் மோசமாகவே நடத்தி வந்துள்ளார். எனவே வேறு நல்ல வேலைக்காக காத்திருந்த Amber-க்கு, சமீபத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.

தொடர்ந்து தன்னை மோசமாக நடத்திய பாஸிற்காக வித்தியாசமான ராஜினாமா கடிதத்தை தயார் செய்தார் Amber.இதற்காக கோல்டு மற்றும் வொயிட் கலர் ஷேடோக்களில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கிரீட்டிங் கார்டு ஒன்றை செலக்ட் செய்த Amber, அந்த கிரீட்டிங் கார்டின் முகப்பில் உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன் (I am sorry for your loss) என்று எழுதினார். ராஜினாமாவை தனது Boss-ற்கு அறிவிக்க Amber பயன்படுத்தியது சாதாரண கிரீட்டிங் கார்டு அல்ல. பொதுவாக இறந்த நபரின் உறவினர்களுக்கு வருத்தம் தெரிவிக்க இரங்கல் செய்தியை தாங்கி செல்லும் bereavement card எனப்படும் கார்டு ஆகும்.

Also read... KFC பேக்குகள் பயன்படுத்தி புதிய ஃபேஷன் - தென்னாப்பிரிக்கா ஆடை வடிவமைப்பாளர்!

தொடர்ந்து அந்த கார்டின் உள்ளே “அது நான் தான். நான் இன்னும் 2 வாரங்களில் புறப்படுகிறேன்” (It is me. I leave in two weeks) என்று தனது இரண்டு வார நோட்டீஸ் பீரியட்டை வேடிக்கையாக அதே சமயம் Boss-ஐ பழிவாங்கும் முறையில் அறிவித்து இருக்கிறார். நான் இந்த நிறுவனத்தை விட்டு செல்வது உங்களுக்கு தான் இழப்பு என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தான் அந்த கார்டின் முன்பக்கத்தில் I am sorry for your loss என்று தனது Boss-க்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதை தனது Reddit அக்கவுண்ட்டில் ஷேர் செய்து இருக்கிறார் Amber.

இது தொடர்பான ஃபோட்டோவை ஷேர் செய்துள்ள Amber, “நீங்கள் எப்போதாவது உங்களை மோசமாக நடத்திய நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறீர்களா? " நான் கேட்டதை சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்ததுள்ளது.இதை என் முதலாளியிடம் கொடுக்க நாளை வரை என்னால் காத்திருக்க முடியாது என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: