• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 11 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பிய அப்பா - கட்டியணைத்து கதறிய மகன்!

11 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பிய அப்பா - கட்டியணைத்து கதறிய மகன்!

கட்டியணைத்து கதறிய மகன்

கட்டியணைத்து கதறிய மகன்

முதலில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

  • Share this:
அமெரிக்காவில் 11 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் சிறையில் இருந்து திரும்பிய அப்பாவைப் பார்த்து, மகன் கட்டியணைத்து கதறியழும் வீடியோ நெட்டிசன்களை இதயத்தை உருகச் செய்துள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு, தான் செய்த குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார். அப்போது, அவருக்கு 2 வயதில் ஜவ்ஹோன் என்ற மகன் இருந்துள்ளார். சிறிய வயது என்பதால் சிறையில் இருந்த தந்தையை ஒருசில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த ஜவ்ஹோன், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக அவரை சந்திக்கவே இல்லை. இந்நிலையில், அண்மையில் சிறையில் இருந்து ரிலீஸான ஜாஸ்மின் நேராக உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கே, தன் மகன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகாமையில் சென்று அமர்ந்து கொண்டார்.

மாஸ்க் அணிந்திருந்த ஜவ்ஹோன், முதலில் தன் தந்தையை அடையாளம் காணவில்லை. எப்போதும்போல் அமர்ந்திருந்துள்ளார். திடீரென ஒருவர் அருகில் அமர்கிறாரே என பார்க்கும் அவர், பார்த்த முகம் போல் இருக்கிறதே என நினைத்து மீண்டும் மீண்டும் என இருமுறை பார்க்கிறார். அப்போது தான் தெரிகிறது, தன் அருகில் அமர்ந்திருப்பது, கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த தன் தந்தை என்பது. 13 வயதாகும் சிறுவன் ஜாவ்ஹோனால் அந்த நிமிடத்தை நம்பவே முடியவில்லை.



தன் அருகில் அமர்ந்திருப்பவர் தந்தை என தெரிந்ததும், சிறுவனால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுகிறார். கூனிக் குறுகி அழும் சிறுவனை, தந்தை ஜாஸ்மின் வாரி அணைத்துக் கொண்டு தானும் அழுகிறார். தந்தை - மகன் இருவரும் உணர்ச்சிப் பொங்க அழுவதை பார்த்து அங்கிருந்தவர்களாலும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருவரும் மாறி மாறி கட்டியணைத்து, தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

முதலில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. நெட்டிசன்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, இதுவரை சுமார் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு தசாப்தமாக தந்தையின் அரவணைப்பு இல்லாமல், அவர் இருக்கிறார் என்று தெரிந்தும் பார்க்காமல் இருப்பது என்பது எவ்வளவு ரணம் என்பதை, அந்த சிறுவன் உடைந்து அழும் கண்ணீரே வெளிப்படுத்துகிறது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

Also read... ’ஏர் இந்தியா விமான கலரில் உணவகம்’ - இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்த ரத்தன் டாட்டா!

இதுவரை பார்க்காமல் இருந்த அப்பா, அந்த சிறுவனுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இனிமேல் தந்தையின் அரவணைப்பில் எல்லா விஷயங்களையும் பெற்று, இழந்த மகிழ்ச்சியைவிட இரட்டிப்பான மகிழ்ச்சியில் வாழ வேண்டும் என ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர், என் தந்தை எனக்கு மீண்டும் கிடைத்தது போன்ற உணர்ச்சி, இந்த வீடியோவைப் பார்க்கும்போது ஏற்படுகிறது, அவர்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். தந்தை அன்பு என்ன என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும் என கூறியுள்ள சிலர், முதியோர் இல்லங்களில் தந்தை மற்றும் தாயை விடுபவர்கள் அவர்களின் அருமையை உணராதவர்கள் என்றும் விமர்ச்சித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: