ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'குறிஞ்சி பூவை பாக்கணும்..' ஆசைப்பட்ட 87 வயது தாய்! தோளில் சுமந்து மலையேறிய மகன்கள்!

'குறிஞ்சி பூவை பாக்கணும்..' ஆசைப்பட்ட 87 வயது தாய்! தோளில் சுமந்து மலையேறிய மகன்கள்!

87 வயதான எலிக்குட்டி பால் மற்றும் மகன்கள்

87 வயதான எலிக்குட்டி பால் மற்றும் மகன்கள்

12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களைப் பார்க்க வேண்டும் என்ற அம்மாவின் கனவை மகன்கள் நிறைவேற்றியுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனது 87 வயது அம்மாவை 1.5 கி.லோ மீட்டர் தோளில் தூக்கிக்கொண்டு மலையேறி அம்மாவிற்குக் காட்டிய இரண்டு மகன்களின் செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

  கேரளாவில் கோட்டயம் மாவட்டம் முட்டுச்சிர என்ற பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகப் பல கி.லோ மீட்டர் கடந்து சென்றுள்ளனர். 87 வயதான எலிக்குட்டி பால் என்ற அம்மாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவருக்கு நெடுநாளாக 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. அது அவரின் கனவாகவே மாறியுள்ளது.

  தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள நிலையில் அதனைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என்று அவர் அவரின் மகன்களிடம் கூறியுள்ளார். அவரின் மகன்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து 100 கி.லோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு அருகில் உள்ள இடத்திற்கு காரில் அம்மாவை அழைத்துச் சென்றுள்ளனர்.

  அங்குச் சென்ற பிறகு தான் தெரிந்தது மலைப் பகுதியில் வாகனம் செல்லாது என்று. உடனே இரண்டு மகன்களும் அம்மாவைத் தோளில் தூக்கிக்கொண்டு 1.5 கி.லோ நடந்தே மலையை ஏறியுள்ளனர். 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் அந்த பகுதியில் தற்போது பூத்துக்குலுங்குகிறது.

  நீலக்குறிஞ்சி பூக்கள்

  அழகிய அந்த காட்சியைப் பார்க்க வேண்டும் என்று கனவுடன் இருந்த அம்மாவிற்கு மகன்கள் பெரும் சிரமம் பட்டு அதனைக் காட்டியுள்ளனர். நீலக்குறிஞ்சி பூக்களுக்கு மத்தியில் அம்மாவை அமர வைத்து அவரை மகிழ்ச்சிப்படுத்திய காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

  Also Read : 'பிடெக் டீக்கடை'... படித்துக்கொண்டே டீக்கடை நடத்தும் மாணவி.. குவியும் பாராட்டுகள்!

  12 வருடங்களுக்கு ஒரு முறை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டம், மூணாறு மலைப்பகுதி மற்றும் கல்லிப்பாறை பகுதியில் பூத்துள்ளது. மேலும் கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் பகுதியிலும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளது.

  இந்த வருடம் விட்டால் மீண்டும் நீலக்குறிஞ்சி பூக்கள் 2030ல் தான் பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Janvi
  First published:

  Tags: Kerala, Mother, Viral News