• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • யூடியூபை கலக்கும் சின்னப்பொண்ணு, பூமாரி, சுபின் ... வீட்டில் நடப்பதை எடுத்துரைப்பதாக இணையவாசிகள் பாராட்டு

யூடியூபை கலக்கும் சின்னப்பொண்ணு, பூமாரி, சுபின் ... வீட்டில் நடப்பதை எடுத்துரைப்பதாக இணையவாசிகள் பாராட்டு

யூடியூபை கலக்கும் சின்னப்பொண்ணு, பூமாரி, சுபின்

யூடியூபை கலக்கும் சின்னப்பொண்ணு, பூமாரி, சுபின்

இதில் உள்ள சின்னப்பொண்ணு, பூமாரி, சுபின் , சோனியா, மஹி ஆகியோர் இணையவாசிகள் இடையே அதிகம் நகைப்பூட்டும் கதாபாத்திரங்கள்.

  • Share this:
    சோனியா, மஹி எனும் யூடியூப் பக்கத்தில் தமிழ் கார்ட்டூன் வடிவில் நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மொத்தம் 300 லட்சம் சப்ஸ்க்ரைபேர்ஸ் இந்த சேனலுக்கு பார்வையாளர்களாக உள்ளனர்.

    இந்த சேனலில் வெளியிடப்படும் வீடியோக்கள் பெரும்பாலும் நமது வீட்டில் நடக்கும் அக்கா , தங்கை , அம்மா அப்பா , அண்டை வீட்டுக்காரர் , அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடையே நாம் பேசும் உரையாடல் ஆகியவை வீடியோவாக பதிவிடுவர்.

    இதில் உள்ள சின்னப்பொண்ணு, பூமாரி, சுபின் , சோனியா, மஹி ஆகியோர் இணையவாசிகள் இடையே அதிகம் நகைப்பூட்டும் கதாபாத்திரங்கள்.











     



    எவ்வளவு மன கஷ்டத்தில் இருந்தாலும் இந்த காணொளியை காணும்போது அதுவும் சின்ன பொண்ணு வின் குரலைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் , லட்சுமி அக்கா சின்ன பொண்ணு சண்டை பாக்காமல் பொழுது போவதில்லை எனவும் சுபின் மைக் பிடிச்சு பேசுற அழகே அழகு எனவும் இணையத்தில் இந்த வீடியோக்களுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றது.



    சோனியாவின் ரொம்ப சவுரியம் டயலாக் இந்த வீடியோக்களை பார்ப்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: