கோயிலுக்கு வந்தபின்பு கால் செய்யவும்; ஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான விலாசம்..

ஆன்லைனில் பொருள் வாங்கிய கஸ்டம்ர் ஒருவர் கொடுத்த வித்தியாசமான விலாசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோயிலுக்கு வந்தபின்பு கால் செய்யவும்; ஆன்லைனில் கஸ்டமர் கொடுத்த வித்தியாசமான விலாசம்..
  • Share this:
ஆன்லைனில் ஆர்டர் செய்தவர்களின் பொருளை டெலிவரி செய்பவர்களுக்கு அவர்களின் விலாசத்தை தேடி கண்டுபிடிக்கவே தனி நேரம் செலவாகும். அதிலும் சிலர் 12-வது குறுக்குத் தெரு 5-வது சந்து என்று அலையவிடுவார்கள்.

டெலிவரி கொடுப்பவர்கள் அரும்பாடுப்பட்டு விலாசத்தை கண்டுபிடித்து வீட்டிற்கு போனால் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். போன் செய்தால் இப்போது தான் வெளியே வந்தேன், வருவதற்கு சில நிமிடங்களாகும் என்று காத்திருக்க வைப்பவார்கள்.

இந்த தொந்தரவு எல்லாம் ஏதும் தராமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த கஸ்டமர் ஒருவர் விலாசம் தனிக்கவனம் பெற்றுள்ளது. ராஜஸ்தானின் கோட்டா பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதற்கு விலாசமாக அந்த பகுதியில் இருக்கும் கோயிலுக்கு வந்தபின்பு கால் செய்தால் போதும், நானே வந்து வாங்கி கொள்கிறேன் என்றுள்ளார்.


இஸ்லாமிய குழந்தைகளை குறிப்பது போல் புகைப்படம் இருந்தால் வேண்டாம். இதுப்போன்று ஒருமுறை புகைப்படம் வைத்து நான் சிக்கலில் மாட்டிக்கொண்டேன்.

மங்கேஷ் என்ற ட்விட்டர் பயனாளர் இதனை புகைப்படம் எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த பலர் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, நானும் இதேப்போன்ற முயற்சி செய்கிறேன் என்று எல்லாம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading