டீயில் அதிகபட்சமாக அனைவரும் விரும்பி தொட்டு சாப்பிடுவது பிஸ்கெட். ஆனால் அதைத் தவிர்த்து சிலர் புதுசாக யோசிக்கிறேன் என்ற பேர்வழியாக, இப்படி முகம் சில விஷயங்களை செய்கின்றனர்.
சமீபத்தில் பேஸ்புக்கில் நபர் ஒருவர் டீ-யில் வேக வைத்த முட்டையை ஊற வைத்து தொட்டு சாப்பிட்ட புகைப்படம் வைரலாகப் பரவியது. இந்த புகைப்படமானது முகம் சுழிக்க வைக்கிறது, பார்க்கும்போதே குமட்டுகிறது போன்ற கமெண்டுகளுடன் 2k லைக்குகளை தட்டிச் சென்றுள்ளது.
இப்படி யோசித்துப் பார்க்கக் கூட முடியாத இந்த பொருத்தமற்ற விஷயத்தை பலரும் பகிரவும் செய்தனர். கற்பனைத் திறனை காட்ட ஒரு அளவே இல்லையா என்கிற கருத்துக்களும் பறந்தன.
மருத்துவ ரீதியில் அணுகினாலும் பாலும் முட்டையும் ஒன்று சேர சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என்கிற ஆய்வுகளும் கிடைக்கின்றன. ஆக ஆய்வுகளின் அடிப்படையில் இது சுவைப்பதில் மட்டுமல்ல உடல் நலத்திற்கும் தீங்கான பொருத்தம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.