Home /News /trend /

உலகம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்... 2906 ஆம் ஆண்டில் இருந்து வந்த காலப்பயணி வேதனை

உலகம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது பாருங்கள்... 2906 ஆம் ஆண்டில் இருந்து வந்த காலப்பயணி வேதனை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

எதிர்காலத்தில் உலகம் அழிவதைக் காண்பிக்க 8 பேரைத் தேர்ந்தெடுத்து எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லப் போவதாகச் சிலர் இணையதளத்தில் கூறிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சிலர் எதிர்காலத்திலிருந்து ஒரு டைம் டிராவலர் வந்துள்ளதாகவும், உலகில் எட்டு நபர்களைத் தேர்வு செய்து, எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் சமூக வலைத்தளத்தில் சொல்லி வருகின்றனர்.

சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, டைம் டிராவலர் என்று கூறப்படும் காலப் பயணம் செய்பவர்கள் பற்றிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட காலம் விடை தெரியாமல் இருக்கும் சில விஷயங்களில் காலப் பயணமும் ஒன்று. டைம் டிராவல் பற்றிய ஆய்வுகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.

சிலர் எதிர்காலத்திலிருந்து ஒரு டைம் டிராவலர் வந்துள்ளதாகவும், உலகில் எட்டு நபர்களைத் தேர்வு செய்து, எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகிப் பகிரப்பட்டு வருகின்றது. 2906 ஆம் ஆண்டிலிருந்து, பின்னோக்கி பயணித்து 2022 ஆம் ஆண்டுக்கு ஒரு சிலர் வந்துள்ளனர் என்றும் அவர்கள் காலப்பயணிகள் என்றும் கூறியுள்ளனர். இதைப் பற்றி சோஷியல் மீடியா கணக்கில் பகிர்ந்தும் வருகின்றனர்.



தாங்கள் வந்ததன் நோக்கம் என்று புலவரைப் பார்த்து அரசர் கேட்டதைப் போல, இவர்கள் என்ன நோக்கத்துக்காக வந்துள்ளனர் என்று வேடிக்கையாகக் கேட்கப் போய், அதைவிட வேடிக்கையாகப் பதில் அளித்துள்ளனர். இவர்கள் நிகழ் காலத்தில் வாழ்பவர்களில் சிலரை, ரேண்டமாக தேர்வு செய்து, எதிர்காலத்துக்குக் (அதாவது அவர்கள் காலத்துக்கு) கொண்டு செல்லப் போவதாகக் கூறினார்கள்.

எதிர்காலத்துக்கு மக்களை அழைத்துச் சென்று, மக்களால் உலகம் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதைக் காண்பித்தால், அப்படி நேராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அவ்வாறு செயல்படுவார்கள் என்ற காரணத்துக்காக, சில நபர்களைத் தேர்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் பதவிடப்பட்டது


பல முறை தாங்கள் எதிர்காலத்திலிருந்து வந்திருக்கிறோம் என்ற ஒரு சில வேடிக்கையான நபர்கள் கூறியுள்ளனர். இந்த டைம் டிராவலருக்கு, @timevoyager என்ற ஒரு டிவிட்டர் கணக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கணக்கின் வழியாக, உலக மக்களை அச்சுறுத்தும் வகையில் ஏற்கனவே இயற்கைப் பேரழிவுகளைப் பற்றிக் கூறியிருந்தார். பருவநிலை பாதிப்பைச் சரியாகக் கையாளவில்லை என்றால், 2024 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதிலும் பல பகுதிகளில் மக்கள் இயற்கைப் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பெரிய பட்டியலை வெளியிட்டிருந்தார்.

Also Read : எலும்பை உறையச் செய்யும் பால்டிக் கடல் பனிக்கட்டியின் மீது ஓவியம்.. வியக்க வைக்கும் அமெரிக்க ஓவியர்!

இன்னும் ஆறு மாதங்களில் எட்டு நபர்களைத் தேர்வு செய்து, இதன் மூலம் தான் ஒரு காலப் பயணி என்பதை நிரூபிப்பதாகவும், எதிர்காலத்துக்கு செல்லும் ஒரு அறிய வாய்ப்பை வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு, டிவிட்டர் யூசர்கள் பலவிதமான கருத்துகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே போல, தானும் ஒரு காலப் பயணி என்று கூறி வரும் மற்றொரு நபர், @timetravlehqr என்ற டிவிட்டர் கணக்கில், 2024 ஆம் ஆண்டில் மற்றுமொரு வைரஸ் தொற்று பரவி, உலகம் முழுவதிலும் தீவிரமான பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
Published by:Janvi
First published:

Tags: Social media, Viral

அடுத்த செய்தி