என்ன ஒரு புத்திசாலித்தனம்...! காப்பி பேஸ்ட் செய்த பசுக்கள்

என்ன ஒரு புத்திசாலித்தனம்...! காப்பி பேஸ்ட் செய்த பசுக்கள்
  • Share this:
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பார்கள். அதனை உணர்த்தும் வகையில் சாலையை கடக்க கூட்டமாக ஓடி வந்த பசுக்கள் தலைமை பசுவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தார் போல் நடந்து கொண்ட செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக நாம் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் கோடுகள் வரையப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.

Also see...தாயை இழந்து தவித்த கோலா கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ


வாகனங்களை நாம் முந்திசெல்ல நினைக்கும்போது எதிரே வாகனம் எதுவும் வரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்த பின் வெள்ளைகோட்டில் இடைவெளி இருக்கும் இடத்தில் மட்டும் முந்தவேண்டும்.

அதுபோல் சாலைகளின் வளைவுகளில் நடுவில் போடப்பட்டு இருக்கும் வெள்ளைகோடு இடைவெளி இன்றி போடப்பட்டு இருக்கும். அந்த இடங்களில் எக்காரணம் கொண்டும் முன்னே செல்லும் வாகனங்களை முந்தி செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த கோடுகள் வரையப்பட்டிருக்கும்.

Also see...ஹலோ ஆண்டாளு சாப்டியா ? மொமெண்ட்... கார் டயரில் தலையை விட்ட பப்பி!இதனிடையே இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பசுக்கள் கூட்டமாகச் செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூட்டமாக ஓடி வரும் பசுக்களில், முன்னே வந்த ஒரு பசு சாலையின் நடுவுல் போடப்பட்டிருக்கும் வெள்ளை கோட்டை மிதிக்காமல் தாண்டி சென்றது. இதனை கண்ட மற்ற பசுக்களும் அவ்விதமே செய்து சாலையை கடந்தன.

மேலும்  ‘Some hurdles are just in mind. And you will not see a better example than this to prove it’ என பதிவிட்டுள்ளார்.
சில தடைகள் மனதில் உள்ளன. அதற்கு இதைவிட பெரிய எடுத்துகாட்டு இருக்க இயலாது என பதிவிட்டுள்ளார்.

Also see...ஆத்தி பெரிய...வளைவா...இருக்கும் போலயே!

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே என்பார்கள். அதனை உணர்த்தும் வகையில் இந்த செயல் இருந்தது. தலைவன் எவ்வழி சென்றாலும் தொண்டன் சற்று யோசித்து செயல் படுவதே சாலச் சிறந்தது என அனைவரையும் யோசிக்க வைத்தது இந்த வீடியோ.

 
First published: January 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading