3 நாட்களுக்கு 6 கிரகங்கள் ஒன்று சேர்கின்றன! மக்களுக்கு பாதிப்பா?... உண்மை என்ன?

- News18 Tamil
- Last Updated: December 25, 2019, 6:23 PM IST
இன்று முதல் 3 நாட்களுக்கு 6 கிரகங்கள் ஒன்று சேருவதால், பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் பலருக்கு எழுந்துள்ளது.
ஜோதிடத்தின் படி தனுசு ராசியில் இன்று தொடங்கி 3 நாட்கள் 27-ம் தேதி வரை சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறது என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து ஜோதிடர்கள் பலன்களை கணித்து வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
இதுகுறித்து பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் சவுந்தரராஜன் ஊடங்கங்களுக்கு தெரிவிக்கையில், கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. கோள்கள் சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. இதுபோல கோள்கள் ஒன்று சேருவது அவ்வப்போது நிகழும். இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
அறிவியல் இப்படி சொன்னாலும் 1962-ம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 8 வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்தன. அப்போது உலகம் அழிந்துவிடும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறினர். ஒரு சில ஜோதிடர்கள் அதை மறுத்தும் இருந்தனர். என்றாலும் அந்த காலகட்டத்தில் கிரக சேர்க்கை அன்று கோவில்களில் இரவு முழுவதும் பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள நடிகை பானுமதி வீட்டில் சிறப்பு யாகம் நடத்தியுள்ளார். நடிகை அஞ்சலி தேவி அந்த நாளில் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்நிலையில் தற்போது 6 கிரக சேர்ககையால் நடக்கப்போவது என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.
ஜோதிடத்தின் படி தனுசு ராசியில் இன்று தொடங்கி 3 நாட்கள் 27-ம் தேதி வரை சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறது என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து ஜோதிடர்கள் பலன்களை கணித்து வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.