• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ’நாயுடன் திருமண புகைப்படம்’... அமெரிக்க மணப்பெண்ணின் புகைப்படம் வைரல்!

’நாயுடன் திருமண புகைப்படம்’... அமெரிக்க மணப்பெண்ணின் புகைப்படம் வைரல்!

’நாயுடன் திருமண புகைப்படம்’

’நாயுடன் திருமண புகைப்படம்’

நாய்க்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, முதல் புகைப்படத்தை கிம் தன் நாயுடன் இணைந்து எடுத்துக்கொண்டுள்ளார்.

  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட்டில் நாயுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் நெட்டிசன்களை கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமணத்துக்கு முன்பு ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷூட் நடத்துவது லேட்டஸ்ட் டிரெண்டாக மாறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய திருமணத்துக்கு முன்பு, வீட்டில் வளர்க்கும் செல்ல நாயுடன் திறந்தவெளியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவருடைய வருங்கால கணவர் இல்லை என்றாலும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த போட்டோஷூட் நடத்திய பெண்ணின் பெயர் ஹனா கிம் (Hana Kim). அவர் ஜராட் பிரிக்மேன் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்து, அண்மையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள கேம்ப் காட்டன் பகுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் ஹனா கிம் ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தினார்.

 



 




View this post on Instagram





 

A post shared by Stephanie Nachtrab (@stephphoto.co)






 

அப்போது, காதலர் ஜராட் பிரிக்மேனுடன் இணைந்து அந்த ஃபோட்டோ ஷுட் நடக்கும் என கேமராமேன் எதிர்பார்த்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக, ஹனா ஹிம் தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து கொண்டுள்ளார்.

wedding photos with her dog images go viral
’நாயுடன் திருமண புகைப்படம்’


இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், அவரின் செல்ல நாய் கேமராவுக்கு அருகிலும், அதற்கு பின் சற்று தொலைவில் ஹனா கிம் ஒரு பூங்கொத்தை கையில் ஏந்தியவாறு நிற்கின்றனர். திருமணத்துக்கு முன்பு அந்த பூங்கொத்தை செல்ல நாய்க்கு கொடுத்து முத்தமழை பொழிந்து நாயின் மீது இருந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 



 




View this post on Instagram





 

A post shared by Jared (@jbrickcity)






 

இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிம், " திருமணத்துக்கு முன்பு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் என்னுடைய கணவரிடம் வைத்தேன். அந்த நாள் முழுவதும் அதே ஒரு ஒரு கோரிக்கையாகவும் இருந்தது. அது என்னவென்றால், திருமணம் செய்வதற்கு முன்பு, திருமண உடையில் என் நாயுடன் இணைந்து முதல் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

 




என்னுடைய விருப்பத்துக்கு காதலர் ஜராட் பிரிக்மேனும் சம்மதம் தெரிவித்தார். எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" எனக் கூறினார். இந்த புகைப்படங்களையெல்லாம் போட்டோ கலைஞர் ஸ்டெபைன் எடுத்தார். அவரும் தனக்கு இது புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். " கிம்மின் திருமண புகைப்படங்களை எடுக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 




 

கிம்முக்கு அவருடைய செல்ல நாய் என்றால் அவ்வளவு விருப்பம் என்பதை புகைப்படம் எடுக்கும்போது உணர்ந்தேன். அந்த நாய் கிம்முக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புகைப்படம் மூலம் கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனத் தெரிவித்துள்ளார். கிம் மற்றும் ஜராட் இணையினர், இந்த நாயை 2014 ஆம் ஆண்டு முதல் வளர்த்து வருகின்றனர்.

சுமார் 7 ஆண்டுகளாக அவர்களுடன் இணைந்து பயணித்த அந்த நாய், அவர்களின் மகிழ்ச்சியில் ஒன்றாகவும் இருந்துள்ளது. இதனால், அந்த நாய்க்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, முதல் புகைப்படத்தை கிம் தன் நாயுடன் இணைந்து எடுத்துக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: