seagull supermarket : ஸ்காட்லாந்தில் கடையில் நுழைந்து டுனா சாண்ட்விச் திருடிசென்ற சீகில் பறவை : வைரலாகும் வீடியோ!

சாண்ட்விச் திருடிசென்ற சீகில் பறவை

சீகல் பறவை ஒன்று கடைக்குள் நுழைந்து டுனா சாண்ட்விச் பாக்கெட்டை திருடி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

  • Share this:
ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் எனும் பகுதியில் பறவை ஒன்றுசெய்த காரியம் சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. சீகல் பறவை ஒன்று கடைக்குள் நுழைந்து டுனா சாண்ட்விச் பாக்கெட்டை திருடி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், கஸ் என்று அன்பாக அழைக்கப்படும் பறவை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நுழைவதைக் காணலாம். மேலும் தானியங்கி கதவுகளை கொண்ட அந்த கடையில் நுழைவதற்காக காத்திருந்த கஸ், கடையில் இருந்து ஒருவர் வெளியே வருவதைக் கண்ட உடன் வேகமாக உள்ளே நுழைய ஓடியது. ஒரு நபர் அருகில் வரும் போது தானியங்கி கதவுகள் திறக்கின்றன.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பறவை உள்ளே நுழைந்தது. மேலும், அங்கு அடுக்கி வைக்கப்பட்ட சாண்ட்விச் பாக்கெட்டுகளை பார்வையிட்டு, அதில் இருந்து 2 டுனா சாண்ட்விச்களை எடுத்துக்கொண்டது.

ALSO READ :  'உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுடன் அன்போடு இருங்கள்..உணவகங்கள் மூடப்பட்டுள்ளது' - இணையத்தை கலக்கும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்

பின்னர் மெதுவாக அந்த பாக்கெட்டை தனது அலகால் கவ்விக்கொண்டு தானியங்கி கதவுக்கு அருகில் சென்றது ஆனால் கதவு திறக்கவில்லை. பின்னர் வெளியில் இருந்து ஒரு நபர் கடைக்குள் நுழைய வந்தபோது கதவு தானாக திறந்தது. உடனே, பறவை தனது டூனா சாண்ட்விட்ச்சை எடுத்துக்கொண்டு வெளியேறியது. அப்போது உள்ளே நுழைய வந்த நபர் பறவையை தடுக்க முயற்சி செய்தார். அசராத பறவை அவரிடம் இருந்து தப்பித்து தனக்கு பிடித்த டுனா சாண்ட்விச்சை ருசி பார்க்க ஆயத்தமானது.

ALSO READ :  இன்ஸ்டாகிராமை கலக்கும் பிராச்சியின் நடனம் - பிரித்திவி ஷாவின் காதலியா?

மேலும் அந்த பறவை நகரத்தின் யூனியன் ஸ்ட்ரீட் பகுதியைச் சுற்றியுள்ள கடைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை கடைக்குள் நுழைந்து தனக்கு பிடித்த உணவினை கஸ் எடுத்துக்கொண்டு வெளியேறுவது வழக்கம் தான் என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

 



 

மேலும் இந்த சாண்ட்விச் திருடும் வீடியோவை வெபர்லி மெக்டொனால்ட் என்பவர் தான் படம் பிடித்துள்ளார். பறவையின் இந்த செயலை வீடியோ பிடித்ததோடு தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ பகிரப்பட்ட சில நொடிகளிலேயே பல நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. அதில் பலர் பறவையை பாராட்டி பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு யூசர் "அபெர்டீனில் உள்ள பறவைகள் எப்போதும் புத்திசாலி பறவைகள்!" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், இந்த பறவையின் சுவை விருப்பத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

ALSO READ :  ட்விட்டரில் வலம்வரும் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளும், அரிய புகைப்படங்களும்!!

இந்த வீடியோவை வெளியிட்ட மெக்டொனால்ட் டெய்லி மெயில் பத்திரிகையிடம் கூறியதாவது, “ஒவ்வொரு நாளும் நான் கஸைப் பார்க்கிறேன். நான் அதனை அதிகாலை அல்லது பிற்பகல் பார்ப்பேன். முதலில் பறவை நொறுக்கு தீனி பொட்டலங்களை திருடிச் செல்லும் . இப்போது அது சாண்ட்விச்களை திருடி செல்கிறது" என்று கூறியிருந்தார்.

 



 

தற்போது கஸ் மற்ற நபர்களை போலவே சாதாரண வாடிக்கையாளராக மாறிவிட்டது. ஆனால் பணம் கொடுத்து பொருளை வாங்கும் பழக்கம் இதற்கில்லை.
Published by:Sankaravadivoo G
First published: