சுற்றுலாவாசிகளின் சொர்க்க நகரத்தில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட 4 மீட்டர் நீள ராஜநாகம்...! - வீடியோ

news18
Updated: October 19, 2019, 11:57 AM IST
சுற்றுலாவாசிகளின் சொர்க்க நகரத்தில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட 4 மீட்டர் நீள ராஜநாகம்...! - வீடியோ
மீட்கப்பட்ட பாம்பு
news18
Updated: October 19, 2019, 11:57 AM IST
உலகின் மிக ஆபத்தான பாம்பு வகைகளில் ஒன்றான ராஜநாகம், அதுவும் 4 மீட்டர் நீளம் கொண்ட பாம்பு கழிவுநீர் செல்லும் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.

பாம்புகள் எப்போதுமே ஆபத்து நிறைந்த உயிரினமாகும். விதிவிலக்காக ஒரு சிலர் பாம்பைக் கண்டு பயப்படவில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் அதனைக் கண்டாலே காத தூரம் ஓடிச்செல்வார்கள். ஏனென்றால், கடித்தால் உயிர் போகும் என்ற பயம்.

வன உயிரிகள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, உயிரைக் கொல்லும் விஷம் கொண்ட பாம்புகள் சில ரகங்கள் தான். மற்ற பாம்புகளின் விஷம் பல நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷமே இல்லாத பாம்பு என்றாலுமே, பார்த்த உடன் அது நம்மை பயப்பட வைக்கும்.


இந்நிலையில், சுற்றுலா வாசிகளின் சொர்க்கமான தாய்லாந்து நாட்டின் க்ராபி என்ற இடத்தில் இருக்கும் கழிவு நீர் கால்வாய் ஒன்றில் இருந்து 4 மீட்டர் நீளம் உள்ள ராஜநாகம் மீட்கப்பட்டுள்ளது. பாம்பு மீட்கப்படும் வீடியோ வைரலாகிவருகிறது.First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...