தன்னைத் தானே விழுங்கும் பாம்பு... எப்படி சாத்தியம்..? நீங்களே பாருங்க

நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீட்டில் தன் வாலை தானே பிடிக்க நினைக்கும் குறும்புத் தனமான வீடியோக்களை கடக்கும் சூழலில் பாம்பு தன் வாலை விழுங்குவது ஆச்சரியம்தான்.

news18
Updated: August 13, 2019, 7:15 PM IST
தன்னைத் தானே விழுங்கும் பாம்பு... எப்படி சாத்தியம்..? நீங்களே பாருங்க
ராஜ நாகம்
news18
Updated: August 13, 2019, 7:15 PM IST
பாம்பு தன் பசியைப் போக்க முதலையையே விழுங்கிய செய்திகளை கேட்டிருக்கிறோம். ஆனால் தன்னையே சாப்பிடும் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Forgotten Friend Reptile Sanctuary என்னும் அமைப்பானது ஊர்வனவற்றை பாதுகாக்கும் இடமாகும். அங்கு சென்ற பாம்பு வல்லுநரான ஜெஸ்ஸி ரோதக்கர் ராஜ நாகம் ஒன்று பசி காரணமாக தன் வாலை தானே விழுங்கும் அதிசயத்தைக் கண்டுள்ளார். இதை மக்களுக்கும் காட்ட தானே செஃல்பி முறையில் வீடியோ எடுத்து அதை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோதான் தற்போது பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இந்த வரலாறு 15 வருடத்திற்குப் பிறகு மீண்டும் இந்த ஊர்வன அமைப்பில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். பின் அந்த வீடியோவில் அந்த பாம்பை காப்பாற்றவும் முயற்சிக்கிறார். ஆனால் ராஜநாகமோ வாலை விட மறுத்து இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. பின் ஒரு வழியாக அவர் அதைக் காப்பாற்றிவிட்டார்.

பொதுவாக ராஜநாகம் மற்ற பாம்புகளை விழுங்கும் தன்மைக் கொண்டது. ஆனால் அது தன்னைத் தானே விழுங்க நினைப்பது புதிதாக இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.அந்த வீடியோவில் தொடர்ந்து பேசும் ரோதக்கர் இந்த பாம்பு பசியில் இருக்கலாம் அல்லது மனமுடைந்திருக்கலாம். என்கிறார். ஆனால் பாம்பிற்குத் தேவையான உணவுகளை சரியான நேரத்தில் அளிக்கிறார்கள். தண்ணீர் என எல்லாம் சரியாகவே அளிக்கப்பட்டு வருகிறது இருப்பினும் ஏன் இவ்வாறு செய்கிறது என்பது புரியவில்லை என்கிறார்.

நாய் , பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீட்டில் தன் வாலை தானே பிடிக்க நினைக்கும் குறும்புத் தனமான வீடியோக்களை கடக்கும் சூழலில் பாம்பு தன் வாலை விழுங்குவது ஆச்சரியம்தான்.
First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...