பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் எனக்கூறுவார்கள் ஆனால் விஷயம் என்னெவெனில் அது பாம்பு தான என கண்டுப்பிடிப்பதற்கே பல ஆராய்ச்சிகள் தேவைப்படும் போல.. பாம்புகளில் பல வகை உடல் நிறங்களை கொண்டவை உண்டு என நாம் அறிவோம். மரம், இலை, கொடி, கம்பி போன்ற பாம்பு வகைகள் கூட நாம் பார்த்திருப்போம். அப்படியொரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் நபர் ஒருவர் இரண்டு வாழைப்பழத்தை ஒரு பெட்டிக்குள் வைத்துள்ளார். அதில் ஒன்றை கையில் எடுத்து கேமரா முன் கொண்டு வருகிறார். அதுவும் சுருண்ட வடிவில் அப்படியே இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது நாக்கை நீட்டுவது தெரிகிறது. ஆம்..! அச்சு அசலாக வாழைப்பழத்தை போலவே உருவம் கொண்டிருக்கும் பாம்பு வகைத்தான் அது.
பால் பைத்தான் என அழைக்கப்படும் இந்த வகைப்பாம்பு காண்பதற்கு அப்படியே பாம்பினை போல காட்சியளிக்கிறது. மஞ்சள் நிற தோலும் ஆங்காங்கே கரும்புள்ளிகளும் உடைய இந்த பாம்பு அதன் அருகில் இருக்கும் வாழைப்பழத்தை போலவே இருக்கிறது. சற்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது பாம்பு என நம்மால் கண்டறிய முடிய இயலும்.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இது உண்மையான பாம்பு அல்ல டூப் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அது உண்மையான பால் பைத்தான் பாம்பு தான். இந்த வீடியோவைப் பார்த்த உங்களுக்கே இனிமேல் வாழைப்பழத்தை பார்த்தால் பாம்பின் நினைப்பு வரலாம்..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.