சரமாரியாக கொத்திய பாம்பிடம் போதையில் மல்லுக்கட்டிய நபர் - வைரல் வீடியோ

சரமாரியாக கொத்திய பாம்பிடம் போதையில் மல்லுக்கட்டிய நபர் - வைரல் வீடியோ
News18
  • News18
  • Last Updated: January 4, 2020, 2:15 PM IST
  • Share this:
போதையில் வம்புக்கு இழுத்தவரை, கருநாகம் சரமாரியாக கொத்தியும், அவர் அதனை விடாமல், சொந்தரவு செய்ய அது கடைசியில் இறந்தே போனது.

ராஜஸ்தான் மாநிலம் தவ்சா பகுதியில் குடிபோதையில் வம்புக்கு இழுத்தவரை கருநாகம் சரமாரியாக கொத்தியது. போதையில் நிதானம் தவறிய இந்த நபர் தனக்கு எதிரே படம் எடுத்து சீறும் பாம்பிடம் பேசி சண்டை போட்டார்.

மேலும் அதை எங்கும் செல்லவிடாமல் துரத்தி துரத்தி வம்புக்கு இழுத்தார். இந்த கலாட்டாவில் பாம்பு அந்த போதை ஆசாமியை பலமுறை கொத்தியது. ஆயினும் அவர் விடவில்லை. இறுதியில் களைப்படைந்த பாம்பு சுருண்டது.


குடிபோதை ஆசாமியை பாம்பிடம் இருந்தும், பாம்பை அவரிடம் இருந்தும் மீட்க பொதுமக்கள் நீண்ட நேரம் முயன்றும் பயனளிக்கவில்லை.இறுதியாக பாம்பு இறந்தவுடன் அந்த நபரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்