பள்ளி மாணவியின் ஷூவுக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு! - திக் திக் நிமிடங்கள்

பள்ளி மாணவியின் ஷூவுக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு! - திக் திக் நிமிடங்கள்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 19, 2019, 12:29 PM IST
  • Share this:
பள்ளி மாணவி ஒருவரின் ஷூவுக்குள் நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அடுத்த கரிக்ககொம் கோவில் பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காலையில் பள்ளிக்குப் புறப்படுவதற்காக தயாராகியுள்ளார்.

அப்போது அவரது தாயார் மாணவியின் ஷூவை எடுத்து அவருக்கு அணிவிக்கும் போது அதில் சிறிய நாகப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்த மாணவியும் அவரது தாயாரும் அதிர்ச்சியடைந்தனர்.


உடனே சுதாரித்த அவரது தாயார் பாம்பு வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக டிபன் பாக்ஸ் ஒன்றை வைத்து ஷூவை மூடி வைத்துள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் பாம்பு பிடிப்பவரான சுரேஷுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சுரேஷ் அந்த பாத்திரத்தை எடுத்துவிட்டு ஷூவில் இருந்து சீறி வந்த குட்டி நாகத்தை லாவகமாக பிடித்து டைல்ஸ் தளத்தில் விட்ட போது ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்தது. இதையடுத்து அந்தப் பாம்பை பிடித்துச் சென்றார் சுரேஷ்.மழைக்காலத்தில் மாணவர்கள் தங்களது ஷூக்களை அணிவதற்கு முன்னதாக உள்ளே எதுவும் பூச்சிகள் உட்புகுந்திருக்கிறதா என்பதை பார்த்து அணிய வேண்டும். எனவே இந்தச் சம்பவம் ஷூ அணிந்து செல்லும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கைப் பாடம்.
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்