• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வானிலிருந்து விழுந்த மாபெரும் பாம்பு... அலறியடித்து ஓடிய மக்கள் - வைரல் வீடியோ

வானிலிருந்து விழுந்த மாபெரும் பாம்பு... அலறியடித்து ஓடிய மக்கள் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

தீடிரென நீளமான பாம்பு ஒன்று வானத்திலிருந்து சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  • Share this:
    காடுகள் அல்லது புதர்கள் நிறைந்த பகுதிகளில் நாம் எங்கு நடந்தாலும் ஆபத்தான விஷபாம்பு இருக்குமோ என்ற பயம் நம் மனதில் எப்போதும் இருக்கும். ஆனால் மக்கள் நிறைந்த பொதுஇடத்தில் பாம்பு ஒன்று தென்பட்டால் எப்படி இருக்கும். அதுவும் நடந்து போகும் சாலையில் தீடிரென வானில் இருந்து பாம்பு விழுந்தால் அனைவருக்கும் ஒரு கணம் இதயமே நின்று போகிவிடும்.

    அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாபெரும் பாம்பு ஒன்று வானத்திலிருந்து சாலையில் விழுகிறது. அதை பார்த்த பொதும்கள் உயிரை காப்பாற்ற சாலையில் அலறியடித்து கொண்டு ஓட தொடங்கினார்கள். ஆனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.



    இந்த வீடியோவில் மிக நீளமான பாம்பு ஒன்று வானில் இருந்து விழுவது போல் இருக்கும். ஆனால் அந்த பாம்பு கம்பி ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்துள்ளது. மெதுவாக பாம்பு அதன் பிடியை தளர்த்தி தரையில் விழுகிறது. பாம்பு கம்பியில் இருப்பதை பார்த்து அங்கிருக்கும் மக்கள் ஆரவார கூச்சலிடுகின்றனர். பாம்பு சாலையில் விழுந்த உடனை பிடிக்க மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.

    இந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஷேர் செய்து கருத்துகள் தெரிவித்தும் வருகின்றனர்.பாம்பு கம்பி மீது இருந்த வரை அந்த இடத்தில் தைரியமாக இருந்த பலர் விழுந்த உடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையும் பாருங்க: 

    பாம்பை வேட்டையாடி கொறித்து உணவாக்கிய அணில் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

    ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ!

    பெண்ணின் மடியில் அமர்ந்து தூங்கும் மலைப்பாம்பு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

    யாரு இடத்துல வந்து யார் சீன் போடுறது... செஞ்சுருவோம் - ட்ரோனை கொத்தி கீழே தள்ளிய காக்கை - வைரல் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: