Home /News /trend /

ஆத்தி.. எவ்ளோ பெருசு.. ராஜ நாகம் மற்றொரு பாம்பை சாப்பிடும் அரிய வீடியோ!

ஆத்தி.. எவ்ளோ பெருசு.. ராஜ நாகம் மற்றொரு பாம்பை சாப்பிடும் அரிய வீடியோ!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

ராஜ நாகம் மற்றொரு இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பாம்பை அதன் வளைக்குள்ளேயே புகுந்து வேட்டையாடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ராஜ நாகம் மற்றொரு இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பாம்பை அதன் வளைக்குள்ளேயே புகுந்து வேட்டையாடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

‘பாம்பென்றால் படை நடுங்கும்’ என்பார்கள். சிங்கம், புலி, கரடியை பார்த்து பயப்படுபவர்களை விட பாம்பு எனச் சொன்னாலே பயந்து ஓடுபவர்கள் அதிகம். அதிலும் ராஜ நாகத்தை பார்த்தால் பாம்புகளே நடுக்கும். ஏனென்றால் ராஜ நாகத்திற்கு டிபன், லன்ச், டின்னர் எல்லாமே பிற இன பாம்புகள் தான். அதனால் ராஜ நாகத்தின் பாதையில் குறுக்கிடுவது என்பது பாம்புகளுக்கு எப்போதுமே கொடுங்கனவாக அமையும்.

பொதுவாக பாம்புகள் சந்தர்ப்பவாத விலங்குகள். அதன் வழியில் குறுக்கிடும் அல்லது கிடைக்கும் எந்த இரையையும் வேட்டையாடும். பெரும்பாலான பாம்புகள் கொறித்துண்ணிகள் அல்லது பறவைகள் போன்ற சிறிய விலங்குகளை உண்ணும். அதே வேளையில், அவற்றைக் கசக்கி அல்லது நச்சு விஷத்தால் கொன்றுவிடும். மலைப்பாம்புகள் பெரும்பாலும் மான்கள், பன்றிகள், குரங்குகள் மற்றும் பிற பெரிய இரைகளை சாப்பிடுகின்றன. ஆனால் கொடூர விஷம் கொண்ட ராட்டில்ஸ்னேக் போன்ற பாம்புகளை கூட ராஜ நாகம் அசால்ட்டாக வேட்டையாடி விழுங்கும், நாகங்களுக்கு எல்லாம் ராஜா என்பதை குறிக்கும் விதமாகவே அதனை ராஜ நாகம் என அழைக்கிறோம்.

ராஜநாகம் உலகிலேயே மிகவும் கொடுமையான விஷம் கொண்டது. அதிகபட்சம் 22 அடி உயரம் வரை வளரகூடியது. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும். 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. ஆண் இனம் பெண்ணை விட நீளமாகவும், பருமனாகவும் இருக்கும். சில சமயங்களில் இணை சேர வரும் பெண் ராஜ நாகங்கள் கூட அவ்வளவு எளிதில் ஆண் ராஜ நாகத்தை அணுகவிடாது. அதற்கு பிடிக்காவிட்டாலும், பெண் ராஜநாகமும் இரையாக்கக்கூடும் என்பதால், ஆண் ராஜநாகத்திடம் மிகவும் ஜாக்கிரதையாகவே இருக்கும்.

also read : இண்டிகோ விமனாத்தில் பையை தொலைத்த நபர்.... கண்டுபிடிக்க செய்த செயலால் அதிர்ச்சி

பாம்புகள் சண்டையிடுவது, ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடுவது, இரையை வேட்டையாடுவது என ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் குவிந்து கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பாம்பையே வேட்டையாடு உணவாக்கி கொள்ளும் வீடியோக்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)

ஸ்னேக் வேல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜநாகம் ஒன்று நீளமான பாம்பு ஒன்றை வேட்டையாடி, அதனை முழுவதுமாக விழுங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராஜ நாகத்திடம் இருந்து தப்பிக்க பெரிய பாம்பு ஒன்று அவசர, அவசரமாக அதன் குழிக்குள் பதுக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனை ஒரே பிடியாக பிடித்த ராஜ நாகம், பருமனான அந்த பெரிய பாம்பை வளையை விட்டு வெளியே இழுத்து, அதன் உடலுக்குள் விஷத்தை செலுத்துகிறது. பின்னர் ராஜ நாகம் அதன் வாயை திறந்து அந்த பெரிய பாம்பை வால் வரை முற்றிலும் விழுங்கி முடிப்பதை காண முடிகிறது. பார்க்கவே மெய் சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Snake

அடுத்த செய்தி