பாம்பு என்றாலே பலருக்கும் வியர்க்க வைக்கும். அப்படிப்பட்ட பாம்பு ஒன்று சிறுவனின் சட்டையில் புகுந்துள்ளது. சிறுவனின் உடலில் பாம்பு ஊறுவதை கண்டு தாயின் மனது துடித்துள்ளது. பாம்பின் பிடியில் இருந்து சிறுவனனை மீட்கும் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. கடைசியாக ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார். அடுத்து நடந்ததை பார்த்தால் நீங்களும் அதிர்ந்து போவீர்கள்.
சிறுவன் படுக்கையில் தூங்குவதை நீங்கள் வீடியோவில் பார்க்கலாம். வாயை துணியால் மூடியுள்ளார். ஒரு நபர் சிறுவனைக் காப்பாற்ற வருகிறார். சிறுவனின் சட்டை வழியாக ஒரு பாம்பு ஊறுகிறது. இப்போது பாம்பை எப்படி வெளியேற்றுவது என்பதுதான் பெரிய கேள்வி. பாம்பை பிடிப்பவர்க்கு கூட அந்த பாம்பு எவ்வளவு விஷம், ஆபத்தானது என்று தெரியவில்லை. ஏனெனில் சிறிது அசைவு கூட இருந்தால், பாம்பு தன்னைத் தற்காத்துக் கொள்ள தாக்கி கடித்துக் கொள்ளும். எனவே பாம்பை சட்டையில் இருந்து அகற்றும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Also Read : மணமேடையில் மணமகன் கொடுத்த சர்ப்ரைஸ். ஷாக்கான மணமகள்
அந்த நபர் பாம்பு இருக்கும் இடத்தைப் பார்த்து, அது இல்லாத பகுதியிலிருந்து சட்டையை பிளேடால் மெதுவாகக் கிழிக்கிறார். அப்போது அந்த பகுதியில் இருந்து உபாம்பு வெளியே வருகிறது. பாம்பு மிகவும் சிறியது ஆனால் ஆபத்தானது. பாம்பு வெளியே வந்ததும், அந்த நபர் பாம்பை கையில் பிடித்தார். அதே நேரத்தில் அந்த நபரை பாம்பு கடித்தது.
அந்த வீடியோவில்,இந்த பாம்பு பற்றிய தகவலையும் பாம்பு பிடிக்கும் நபர் கூறியுள்ளார். இது கிரேட் பாம்பு. இந்த பாம்பு விஷம் இல்லை. வெளியில் வெயில் சூடாக இருப்பதால், குளிர்ச்சியடைய இடம் கிடைத்தால், அத்தகைய பாம்புகள் வீட்டிற்குள் நுழைகின்றன. இந்த பாம்புகள் விஷம் இல்லை என்றாலும், பயம் ஒருவரைக் கொன்றுவிடும். மேலும் இந்த பாம்பு தன்னை ஐந்து முறை கடித்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சுஜய் ஸ்நேக் சேவர் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இருப்பவரின் யூடியூப் சேனல் தான் இது. அவரின் பெயர் சுஜய். இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இப்படி பல பாம்புகளை பிடித்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.