உயிருடன் இருந்த விஷப் பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை... இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ
இணையத்தில் பச்சை தவளைகள் முழு பாம்பை அப்படியே உண்ணும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. பலரும் தவளையின் வயிறு அவ்வளவு பெரியதா? என ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

உயிருடன் இருந்த பாம்பை அப்படியே சுவைத்து உண்ணும் தவளை
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 5:16 PM IST
ஆஸ்திரேலியாவில் பச்சை நிறத் தவளை ஒன்று அப்படியே பாம்பினை சுவைத்து உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தவளை, எலி போன்றவற்றை பாம்புகள் உணவாக உட்கொள்வது வழக்கம். இதனைத் தான் உணவு சங்கிலி முறையில் சிறு வயதில் இருந்து பலரும் படித்திருப்பார். பார்த்திருப்பார்.
ஆனால் இதற்கு மாற்றாக பச்சை தவளை ஒன்று, முழு பாம்பினை அப்படியே சுவைத்து உண்ணும் செயல் இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றது. இதற்கு முன்னதாக இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தவளை ஒன்று முழு பாம்பையும் அப்படியே விழுங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் காடுகளில் உணவு சங்கிலி முறையில் இவை எல்லாம் சாத்தியம் என கேப்சனோடு வெளியிடிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தில் உறையவைத்தது. பாம்பை உண்ணும் அளவிற்கு தவளையின் வயிறு பெரிதா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
Frog swallows a snake🙄
கடந்த பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியாவில் கோஸ்டல் டைபான் வகை பாம்பினை தேடிச் சென்று உண்ட தவளை உயிர் பிழைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஜேமி சேப்பல் என்பவர் தனது வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக டெய்லி மெயில் செய்திதாள் நிறுவனத்திற்கு அவர் தெரிவிக்கையில், டவுன்ஸ்வில்லில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் என்னை அழைத்து தவளை ஒன்று பாம்பினை விழுங்குவதாக அழைத்தார்.
நான் ஓடிச் சென்று பார்த்த போது அங்கு தவளை ஒன்று பாம்பினை விழுங்கி கொண்டிருந்தது. நான் அங்கு சென்ற கொஞ்ச நேரத்தில் முழு பாம்பினையும் தவளை விழுங்கி விட்டது. நான் அந்த பாம்பினை காப்பாற்ற நினைத்தேன். ஆனால் காலம் கடந்து விட்டது.

தவளை உயிருடன் இருக்குமா ? என்பதில் எனக்கு ஐயம் எழுந்தது. நான் தவளையை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டேன்.இதுவரை தவளையின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை .
இதனை புகைப்படம் எடுத்து எனது முகநூல் பக்கத்தில் பத்திவிட்டேன். பிறகு மிக அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் ஷேர் என எனது போஸ்ட் வைரலானது என தெரிவித்துள்ளார்.

கோஸ்டல் டைபான் வகை பாம்புகள் மனிதர்களுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. பிற பாம்புகளின் நச்சைவிட இவற்றின் நச்சு அதிக வேகத்தில் செயல்படுவதால், உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் கடிபட்டவர் அரை மணி நேரத்தில் இறக்க வாய்ப்புண்டு.

இதன் விஷம் நரம்பு மண்டலத்தையும், இரத்தத்தின் உறைவு திறனையும் பாதிக்கிறது, இது தலைவலி, குமட்டல், பக்கவாதம், உட்புற இரத்தப்போக்கு மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். கோஸ்டல் டைபான் வகை பாம்பு நிலத்தில் வாழக்கூடிய விஷப் பாம்பு.

இதனிடையே கோஸ்டல் டைபான் வகை பாம்பினை தேடிச் சென்று உண்ட தவளை உயிர்பிழைத்துள்ளது. அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Everything is possible in food chain in the wild pic.twitter.com/yFJagDhUo5
— Susanta Nanda (@susantananda3) November 24, 2020