பயமா.. எனக்கா... பாம்பின் முட்டைகளை எண்ணி வீடியோ பதிவிடும் இளைஞர்

முட்டைகளை எண்ணி வீடியோ பதிவிடும் ஜெய் ப்ரூவர்

பாம்பை கண்டால் ஓட்டம் பிடிக்கும் கூட்டத்திற்கு நடுவே வாழ்ந்து வருகின்றோம். இதுவரை வரை நாம் பாம்பினை கண்டால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிப்பதும், உடனே பதட்டத்தில் துண்டை காணும் துணியை காணும் என ஓடித் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கு நிலையே வேறு..

 • Share this:
  மகுடி ஊதி பாம்பினை ஆட்டிவைக்கும் பாம்பாட்டிக்கே டஃப் கொடுக்கும் படி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றார் ஜெய் ப்ரூவர் என்பவர். இவர் கலிஃபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனராக உள்ளார். இவருக்கு ஊர்வன வகை விலங்குகளை தனது மிருகக்காட்சிசாலையில் வைத்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம். அவற்றை பராமரிப்பதை தனக்கென வைத்துள்ள இணையதள பக்கங்களில் பகிர்வார்.

  பெரும்பாலும் பாம்புகள் குறித்தும், அவை எவ்விதம் முட்டையிடும், முட்டையை எப்படி பாதுகாக்க வேண்டும், ஒரு பாம்பு எத்தனை முட்டையிடும், இடும் முட்டைகளை எண்ணி அவற்றை இணையத்தில் வீடியோவாக பதிவிடுவார். இவரது வீடியோவைக் காண இணையத்தில் ஒரு ரசிக கூட்டம் உண்டு.

  அவ்விதம் அவர் பகிர்ந்துள்ள சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. வழக்கம் போல ஜெய் ப்ரூவர் வீடியோ எடுத்துக்கொண்டு பாம்பின் முட்டைகளை எண்ண முற்படும் போது ஒரு மலைப்பாம்பு அவரைத் தாக்கியது.

           எனினும் சற்றும் பயம் கொள்ளாது பாம்பு தன்னை தாக்க வரும் போது மிகவும் அமைதியாக அதனை கையாண்ட விதம் இணையவாசிகள் இடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாம்பு தாக்க வந்தது குறித்து தனது வீடியோவில் பேசிய அவர், கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ஒன்று. பாம்பு எவ்வளவு புத்திசாலித்தனம் நிறைந்துள்ளது என கூறியுள்ளார். இவரது வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் மில்லியன் கணக்கில் காட்சிகளைப் பெரும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: