Viral : கையிலிருந்த பாம்பு திடீரென கண்ணை கொத்தியது... அடுத்து? - ஷாக்கிங் வைரல் வீடியோ

வீடியோ காட்சி

நிக் ஒரு ஆபத்தான பாம்புடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பாம்பு அவரை நேரடியாக கண்ணில் தாக்கியது.

  • Share this:
    பாம்பை கண்டால் படையை அலறும் என்பார்கள்... ஆனால் அப்படிப்பட்ட பாம்பை சிலர் கையில் பிடித்து விளையாடி சாகசாம் செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து தங்களது அசாத்திய தைரியத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் அச்சுறுத்தும் பாம்பிடம் எப்போதும் உஷாருடன் இருக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் அது நமது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். அதை தான் இந்த வீடியோவும் நமக்கு உணர்த்துகிறது.

    இந்த வீடியோவில் வரும் நபர் ஒருவர் மலைபாம்பை பிடித்து அதனை வைத்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார். பாம்பு அவரது கையை பலமாக கடித்தும் அதை அவர் விடவில்லை. சட்டென்று எதிர்பாராதவிதமாக அவரது கண்ணை மலைபாம்பு கொத்தியது.



    இந்த நபரின் பெயர் நிக். இதுபோன்ற பல வீடியோக்களை அவரது பாம்புகளுடன் அவரது சமூக ஊடகங்களில் பார்க்க முடியும். தற்போது வைரலாகி வரும் வீடியோ அவரது நிக் தி ரேங்க்லர் யூடியூப் சேனலில் உள்ளது. இது புளோரிடாவில் உள்ள எவர்லேண்ட்ஸ் தேசிய பூங்காவின் வீடியோ. நிக் ஒரு ஆபத்தான பாம்புடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பாம்பு அவரை நேரடியாக கண்ணில் தாக்கியது.

    இந்த வீடியோவை நிக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மலைபாம்பு நேரடியாக அவர் கண்ணை தாக்கிய பின், கண்ணின் மேல் பகுதியிலிருந்து ரத்தம் வழிகிறது. இதற்கிடையில் நிக் ஒரு பாம்பால் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. அவர் பல முறை பாம்புகளால் கடிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவர் பலத்த காயமடையவில்லை.
    Published by:Vijay R
    First published: