முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கன்றுக்குட்டியின் காலை பிடித்த மலைப்பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?

கன்றுக்குட்டியின் காலை பிடித்த மலைப்பாம்பு.. அடுத்து நடந்தது என்ன?

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் நுழைந்து கன்றுக்குட்டி ஒன்றின் காலை கவ்விப்பிடிக்கும் வீடியோ காண்போரை திகிலடைய வைத்துள்ளது. 

  • Last Updated :

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் நுழைந்து கன்றுக்குட்டி ஒன்றின் காலை கவ்விப்பிடிக்கும் வீடியோ காண்போரை திகிலடைய வைத்துள்ளது.

பாம்புகளில் சில வகைகளுக்கு மட்டுமே கொடுமையான விஷம் உள்ளது என்றாலும், அதனை பார்த்தாலே பயந்து நடுங்குவதை யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. பாம்பு என்ன நிறம், அளவு மற்றும் இனமாக இருந்தாலும் அதை பார்த்த மாத்திரத்திலேயே அடிவயிற்றில் இருந்து ஒரு திகிலுணர்வு கிளம்பி வரும். அதனால் தான் ‘பாம்பென்றால் படையே நடுங்கும்’ என்ற பழமொழி கூட உருவானது. அதுவும் மலைப்பாம்பு வழியில் படித்திருந்தால் புலி, முதலை போன்ற காட்டில் வாழும் கொடுமையான மிருகங்கள் கூட 10 அடி பின்னால் தள்ளிப்போகும்.

ஏனென்றால் மலைப்பாம்பு தனது வலையை விட்டு வெளியே வந்து வேட்டையாடுவதை விட, வழியில் கிடைத்ததை எல்லாம் வேட்டையாடக்கூடியது. எனவே பிற விலங்குகள் அதனிடம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஜாக்கிரதையாக இருக்கும். இப்படிப்பட்ட கொடூரமான குணங்களைக் கொண்ட மலைப்பாம்பு, சைவ உண்ணியான பசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்தால் சொல்லவும் வேண்டுமே. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றைத் தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள், அது நிச்சயம் காண்போரை திகிலடையச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

also read : பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!

அந்த வீடியோவில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு முதலில் பசுக்கள் அடைந்து வைத்துள்ள இடத்திற்குள் தனக்கென உரித்தான பாணியில் சத்தமே இல்லாமல் மெல்ல நுழைகிறது. இதைப் பார்க்கும் போதே நமக்கு அல்லுகிளம்பும், அங்கு இரண்டு கன்றுகுட்டிகள் பின்னால் வரும் ஆபத்து தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றன. மெதுவாக அவற்றை நோக்கி முன்னேறும் மலைப்பாம்பு, அதில் ஒரு கன்றுகுட்டியின் காலை கடிக்கிறது. இதனால் வலி தாங்காமல் கதறியபடியே கன்றுக்குட்டி அங்கும், இங்கும் ஓடுகிறது. அப்போதும் மலைப்பாம்பு தனது பிடியை விடாமல் கவ்விக் கொண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கன்று குட்டி எவ்வளவு போராடியும் மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. கன்று தப்பியதா அல்லது மலைப்பாம்புக்கு இரையாகிவிட்டதா என்பது தெரியவில்லை.




 




View this post on Instagram





 

A post shared by Wildlifeanimall (@wildlifeanimall)



 also read : 5 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை வளர்த்தவருடன் இணைந்த நாய்- எமோஷ்னல் வீடியோ!

இந்த வீடியோவை வைல்டு லைஃப் அனிமல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ‘கன்றுகுட்டி மீது பாம்பு தாக்குதல்’ என்ற கேப்ஷன் உடன் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதனை படம் பிடித்த நபரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளனர். பாம்பு கன்றுக்குட்டியை தாக்குவதை படமெடுத்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, அதனை பாம்பிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாமே? என சரமாரியாக வெளுத்து வாங்கி வருகின்றனர். ‘இந்த வீடியோ எல்லாம் இப்போது அவசியம் இல்லை... கன்றுக்குட்டிக்கு உதவுவது தான் முக்கியம்’. ‘எப்படியாவது அந்த கன்றுக்குட்டியை காப்பாற்றுங்கள்’ என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

First published:

Tags: Snake, Viral Video