ப்ளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி படாதபாடு படும் பாம்பு - வைரல் வீடியோ

ப்ளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி படாதபாடு படும் பாம்பு - வைரல் வீடியோ
News18
  • News18
  • Last Updated: January 9, 2020, 6:10 PM IST
  • Share this:
ப்ளாஸ்டிக் பயன்பாடு மனிதர்களைத் தாண்டி விலங்கினங்களுக்கு பெரிய தீங்காக இருப்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் வந்து குவிந்து வருகின்றன.

பயன்படுத்த எளிதானது என்ற ஒரே காரணத்திற்காக பெருமளவில் புழக்கத்தில் உள்ள, பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் தீங்காகவே இருக்கிறது.

மறுசுழற்சி என்று பிளாஸ்டிக்கை தடுக்க ஒரு செயல்முறை பின்பற்றப்பட்டாலும், மறுசுழற்சி என்ற நிலைக்கே கொண்டு செல்ல முடியாமல் கோடிக்கணக்கான டன் பிளாஸ்டிக்-கள் நிலமெங்கும் குவிந்து கிடக்கின்றன.


கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால், கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவது, நிலத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் சென்னையில் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில், பாம்பு ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி, அதனை செரிக்க முடியாமல் படாதபாடு பட்டு, மீண்டும் வெளியே தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.வீடியோவைப் பார்க்கும் பலரும், மனிதர்களின் எளிய வாழ்வுக்காக படைக்கப்பட்ட பிளாஸ்டிக்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா உயிரினங்களுக்கும் தீங்காக அமைகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also See...

 
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்