Smriti Irani | பெண் கல்வியின் தேவை... ஸ்மிருதி இரானி வெளியிட்ட வைரல் வீடியோ!

பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்தும் அழகான காட்சிகள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்தும் அழகான காட்சிகள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

  • Share this:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு அனிமேஷன் வீடியோ அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த பிரபலமான வீடியோவில் ஒரு அருமையான செய்தி உள்ளது. அதில் அழுக்கு முகம், அழுக்கு உடைகள் மற்றும் கலைந்த கூந்தல் கொண்ட ஒரு பெண்ணை முதலில் காட்டுகின்றனர். சிறுமி கையில் ஒரு விளக்குமாறு வைத்திருக்கிறாள், அவள் பக்கத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும் ஒரு வாளி இருக்கிறது மற்றும் அவள் கண்களில் கண்ணீர் ததும்பி உள்ளது.

வீடியோ தொடர்கையில் ஒரு கை வந்து சிறுமியின் கையில் இருந்து விளக்குமாறு எடுத்து விட்டு புத்தகத்தை கொடுக்கிறது, பின்னர் கண்ணீரைத் துடைத்து, தலைமுடியை அழகாக சீவி விட்டு , பள்ளி சீருடை அணியச் செய்து வண்ணத்துப்பூச்சியின் இறக்கையும் கொடுக்கிறது. வீடியோவின் பின்னணியில் ‘தில் ஹை சோட்டா சா, சோட்டி சி ஆஷா’ பாடல் இசைக்கப்படுகிறது. கடைசியில், சிறுமிகளுக்கு ‘பறக்க சிறகுகளைக் கொடுங்கள்’ என்ற அருமையான செய்தியுடன் வீடியோ நிறைவடைகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Smriti Irani (@smritiiraniofficial)






இந்த வீடியோவை ஸ்மிருதி #BetiBachaoBetiPadhao என்ற ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் தங்கள் மகள்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான அவசியத்தை இந்த வீடியோ மூலம் கூறியுள்ளார். இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில் பலரும் லைக் செய்துள்ளனர். மேலும் மனீஷ் பால் போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவை பாராட்டி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்தும் அழகான காட்சிகள் என யூசர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் GIF-கள் மூலம் கதைகளை கூறி வரும் போஹ்ரா சகோதரிகள் இந்த அழகான வீடியோவை தயாரித்துள்ளனர். இந்த வீடியோவை ஆரம்பத்தில் போஹ்ரா சகோதரிகள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். அவர்கள் ஷேர் செய்திருந்த வீடியோவை 9,000 பேர் மட்டுமே பார்த்துள்ள நிலையில் தற்போது லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்மிருதி இரானி அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு நடிகையாக இருந்துள்ளார். ஏக்தா கபூரின் ஹிட் ஷோ ‘கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி’ படத்தில் முன்னணி நடிகையான ‘துளசி’ வேடத்தில் நடித்தார். அந்த ஷோ சுமார் 8 ஆண்டுகள் ரசிகர்கள் ஆதரவுடன் ஒளிபரப்பானது. இந்த ஷோ சமீபத்தில் 21 ஆண்டுகளை நிறைவு செய்தது. அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஷேர் செய்து ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியுடன் கொண்டாடினார்.
Published by:Archana R
First published: