ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மொபைல் போனை வியப்போடு பார்க்கும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

மொபைல் போனை வியப்போடு பார்க்கும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : குரங்குகள் கூட்டமாக அமர்ந்து கொண்டு செல்போனை ஆச்சர்யத்துடன் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குரங்குகள் சில கூட்டமாக மொபைல் போனை பார்த்துக் கொண்டு கைகளால் ஸ்க்ரீனை மாற்றி போனில் அப்படி என்ன தான் இருக்கின்றது என ஆச்சர்யமாக பார்த்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 3 குரங்குகள் ஒன்றாக அமர்ந்து கொண்டு மனிதரின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் தொடுதிரையை என்ன இது ஒன்றும் புரியவில்லை இதனை கையில் வைத்துக் கொண்டு அனைவரும் சுற்றுகின்றனர் என்பது போல் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றது. இந்த வீடியோவை ஸ்மார்ட் போன் அடிக்சன் என்ற தலைப்பில் ஐ.ஏ.அதிகாரி எம்.வி.ராவ் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக இளைஞர் ஒருவரின் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொள்ளும் குரங்கு, அதனை கொடுக்க மறுத்துக் கொண்டே இருக்கிறது. பின்னர் அவர் கையில் வைத்திருக்கும் மாம்பழ ஜூஸைக் கொடுத்த அடுத்த நொடியில் கண்ணாடியை தூக்கி அந்த இளைஞரிடம் வீசுகிறது.

குரங்கின் இந்த சேட்டை முன்னதாக இணையத்தில் வைரலானது.

First published:

Tags: Viral Video