வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை...! வைரலாகும் வீடியோ

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை...! வைரலாகும் வீடியோ
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை
  • Share this:
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனையின் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. பூனை, நாய் வளர்க்கும் பெட் பிரியர்கள் பெரும்பாலும் தங்கள் செல்ல பிராணிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணுவர்.

செல்லப் பிராணிகளின் விளையாட்டு, குட்டிக்கோபம், செல்லக்கடி இவற்றில் மனம் இளகாதவர்கள் மனிதராக இருக்க முடியாது. செல்லப் பிராணிகள் விளையாட்டுக்கு மட்டும் அல்ல. உடல் உள ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளன. அத்தகைய செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகளை பலரும் வீடியோவாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்விதம் பூனை வளர்க்கும் பெட் பிரியர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பூனை வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 50.9K ரீ ட்வீட்டையும் பெற்று ட்விட்டரை கலக்கி வருகின்றது.


 கடந்த ஆண்டு இதே போன்று பூனையின் டெம்பிளேட் ஒன்று வைரலானது. பெண் ஒருவர் வெள்ளை பூனையை பார்த்து ஆவேசமாக கத்துவது போலவும், தனக்கு பிடிக்காத உணவை உரிமையாளர் வைத்திருப்பது போலவும் அந்த டெம்பிளேடில் இடம் பெற்றிருந்தது.

இது உலகம் முழுமையும் வைரலானது. இந்த டெம்பிளேடில் இருந்த பெண் 2011-ல் வெளிவந்த தி ரியல் ஹவுஸ் வைப் ஆப் பிவெர்லி எனும் அமெரிக்க தொடரில் நடித்த பெண்மணி. இவரது பெயர் டைலர் ஆம்ஸ்ட்ராங். மற்றொரு புறம் வைரலான பூனையின் பெயர் ஸ்மேட்ஜ்.

இதன் உரிமையாளர் தனது இன்ஸ்டாவில் இதன் புகைப்படத்தை பதிவிட்டு அதெற்கென தனி அக்கௌண்ட் வைத்துள்ளார். இந்த இரு வேறு புகைப்படங்களையும் நெட்டிசன் ஒருவர் தனது இணையத்தில் பதிவிட இந்த டெம்பிளேட் உலகம் முழுமையும் வைரலானது.

 

First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading