அம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்- வைரல் வீடியோ..!

தன் தாய் கீழே விழுந்ததை கண்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற சிறுவன்.

அம்மாவை இடித்த காரை வெகுண்டெழுந்து தாக்கும் சிறுவன்-  வைரல் வீடியோ..!
மனம் உருக வைக்கும் வைரல் வீடியோ..!
  • News18
  • Last Updated: December 12, 2019, 8:10 AM IST
  • Share this:
சீனாவில் சாலையை கடந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது ஒரு கார் மோதியது.

தன் தாய் கீழே விழுந்ததை கண்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற சிறுவன், அந்த காரை எட்டி உதைத்து, ஓட்டுநருடன் சண்டைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

அந்த வீடியோவில் தாயும் சிறுவனும் பாதசாரிகள் சாலையைக் கடக்கின்றனர். அப்போது சிக்னலை மதிக்காத கார் ஒன்று வேகமாக வந்து இருவரையும் மோத அதில் தாய் மட்டும் கீழே விழுகிறார்.


இதனால் கோபமடைந்த அந்த சிறுவன் காரை எட்டி உதைத்து தன் கோபத்தை காட்டுகிறார். அதோடு அந்த கார் உரிமையாளரிடமும் சண்டைக்குச் செல்கிறார். இப்படி தாய் மீது அதிக பாசம் கொண்ட சிறுவனின் செயல் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.


First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading