Viral Video : பார்த்து வா மச்சி... இணையத்தில் வைரலாகும் நாய், குதிரை ப்ரண்ட்ஷிப்

இணையத்தில் வைரலாகும் நாய், குதிரை ப்ரண்ட்ஷிப்

ஒரு சிறிய நாய், குதிரையை கட்டி வைத்திருந்த கயிற்றை பிடித்து கொண்டு கூலாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்றவற்றில் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகள் இடம்பெறும் அழகான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. மேலும் உலகம் முழுவதிலும் ஆபத்தில் சிக்கும் பல்வேறு விலங்குகள் அவ்வப்போது மீட்கப்படும் சம்பவங்களை நாம் டிவி செய்திகள் அல்லது சோஷியல் மீடியாக்களில் பார்த்து வருகிறோம். சில நேரங்களில் விலங்குகளின் குறும்புத்தனமான செயல்கள் மக்கள் மனதில் புன்னகையை வர வைத்து விடும். குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற வீடியோக்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்களுக்கு இந்த குறும்புத்தனமாக காட்சிகள் புத்துணர்வை தரும் வகையில் அமைத்தது.

அவற்றில் நாம் அடிக்கடி பார்ப்பது விலங்குகளின் குறும்புத்தனங்கள், அவற்றின் அன்பு மற்றும் விசுவாசம் போன்ற செய்திகள் தான். உரிமையாளர்களை காப்பாற்றிய நாய், பிற விலங்குகள் இடையேயான பாசம் போன்ற வீடியோக்கள் வைரலானது. அந்த வரிசையில் தற்போது ஒரு சிறிய நாய், குதிரையை கட்டி வைத்திருந்த கயிற்றை பிடித்து கொண்டு கூலாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு சிறிய பழுப்பு நிற நாய் வாயில் ஒரு நீண்ட கயிற்றைப் பிடித்துள்ளது. இந்த கயிறு அதற்கு பின்னால் நடந்து செல்லும் குதிரையுடன் கட்டப்பட்டுள்ளது. குதிரையின் கழுத்தில் நீண்ட கயிற்றால் கட்டப்பட்டிருப்பது அந்த வீடியோவில் தெரியும். நாய் கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு குதிரையை தன்னுடன் நடக்கச் செய்யுமாறு இழுக்கிறது. அழகான பழுப்பு நிற குதிரையும் அந்த அழகான சிறிய நாய்க்கு கீழ்ப்படிந்து அதற்கு பின்னால் ஒய்யாரமாக நடந்து செல்கிறது. இந்த வீடியோ எடுத்த பகுதி நன்கு காற்றோட்டமாகவும், பின்னணியில் பச்சை பசேலென மரங்களால் அழகாக சூழ்ந்திருப்பதியும் காண முடிகிறது.



இந்த வீடியோ கிராமத்தில் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோவில் குதிரைக்கு அடுத்ததாக மற்றொரு பெரிய நாய் ஒன்றும் உள்ளது. அந்த பெரிய நாய், குதிரை உடன் நடந்து செல்கிறது. கியூரேட்டர் என்ற யூடியூப் சேனல் இந்த கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளது, தற்போது இந்த வீடியோவை மற்ற சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவில் குதிரைக்கும், நாய்க்கும் இடையிலான அழகான உறவை நெட்டிசன்கள் ரசிக்கின்றனர்.

Also Read : திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நாய், பூனையுடன் இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு நாய் மூன்று பூனைக்குட்டிகளை கவனித்துக்கொண்டிருந்தது. நாய்க்கும் பூனைகளுக்கும் இடையிலான இந்த நட்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட நெட்டிசன்கள் மிகவும் அழகான உறவு என கமெண்ட் செய்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: