இந்த குழந்தை பாடும் வீடியோவை பார்த்தால் நீங்களே அசந்துப்போவீர்கள்...

காணும் அனைவரும் அந்த குழந்தையின் திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த குழந்தை பாடும் வீடியோவை பார்த்தால் நீங்களே அசந்துப்போவீர்கள்...
பாட்டு பாடும் குழந்தை
  • News18
  • Last Updated: October 12, 2019, 5:16 PM IST
  • Share this:
இசைக்கு வயதில்லை என்பார்கள். அது உண்மைதான் போல என்று எண்ணத் தோன்றுகிறது இந்தக் குழந்தை பாடும் வீடியோவைப் பார்த்தால்...

ஆம், முட்டிப் போட்டு தவழும் வயதில் அந்த குழந்தை லதா மங்கேஷ்கரின் பாடலைப் பாடி அசத்துகிறது. கண்ணை மூடிக் கேட்டால் பெரியவர்கள் பாடுவது போல் அவ்வளவுத் தெளிவாகப் பாடுகிறது அந்தக் குழந்தை.

லதாமங்கேஷ்கர் பாடிய லக் ஜா கலே என்ற அந்த பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த ஹோ கௌவுன் தி என்ற படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதை அந்தக் குழந்தை ஹை பிச் , லோ பிச் என பிச்சு எடுத்துவிட்டது.


காணும் அனைவரும் அந்த குழந்தையின் திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் தங்கள் சமூக வலைதளங்களிக் பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல்தான் இதற்கு முன் ரனு மந்தால் என்ற பெண் பேருந்து நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிய வீடியோ வைரலாகி இன்று வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இன்று பாலிவுட்டின் பல முன்னனி இசையப்பாளர்களின் இசையில் பாடி வருகிறார்.

அதேபோல் இந்தக் குழந்தைக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 
First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading