Home /News /trend /

பறவைகளின் பசி போக்கிய சிறுவன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பறவைகளின் பசி போக்கிய சிறுவன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பறவைகளின் பசி போக்கிய சிறுவன்

பறவைகளின் பசி போக்கிய சிறுவன்

Viral Video : குட்டிச் சிறுவன் புல்வெளியில் அமர்ந்து பறவைகளின் பசி போக்கிய செயலுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விலங்குகள் செய்யும் குறும்புத் தனங்களை வீடியோவாக வெளியிடுவார். அவ்விதம் தற்போது குட்டிச் சிறுவன் புல்வெளியில் அமர்ந்து பறவைகளுக்கு உணவூட்டும் வீடியோ ஒன்றை சுசந்தா நந்தா வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் பறவைகள் ஒன்று கூடி சிறுவனிடம் உணவுக்காக கூச்சலிட்டு கொண்டு உள்ளது. சிறுவன் தனது கைகளில் இருந்து உணவை எடுத்து பறவைக்கு ஊட்டி விடுகின்றான். பறவைகளின் பசி போக்கிய சிறுவனுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.



    இதே போன்று நாய் ஒன்று தனது உரிமையாளரை அப்படியே பின் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.  நாய் ஒன்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை சுசந்தா நந்தா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நாயின் உரிமையாளர் முன் நின்று உடற்பயிற்சி மேற்கொள்கிறார். இதனை பின்னர் இருந்தவாறு கவனிக்கும் நாய் உரிமையாளர் செய்யும் உடற்பயிற்சியை அப்படியே செய்கின்றது.



    இதனை நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுசந்தா நந்தா Real follower என்ற தலைப்பின் கீழ் பதிவிட்டுள்ளார். தன்னை இணையத்தில் பின் தொடர்பவர்கள் அப்படியே பின் தொடர்கின்றனர். என பொருள் வரும் படியும் இந்த வீடியோ அமைந்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி