உருவத்தின் அளவு முக்கியமல்ல... நிரூபிக்கும் நாய் குட்டி - இணையத்தில் வைரலாகும் ஒற்றை புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் ஒற்றை புகைப்படம்

அளவில் பெரிய காண்டாமிருகத்தை குட்டி நாய் ஒன்று விரட்டும் செயல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து, நாய் குட்டி துரத்திய பின்னர் அதனிடம் உங்களிடம் இதனை செய்ய எப்படி முடிந்தது என கேள்வி கேட்பது போலவும் மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளனர். இந்த ஒற்றை புகைப்படம் பலரின் கவனம் பெற்று ’ Size Does Not Matter ' எனும் வாசகத்தை பலரின் மனதில் பதிவேற்றியுள்ளது.

 • Share this:
  வாழ்க்கையில் போராட நமது உருவம், உயரம் முக்கியம் இல்லை என்பதை பலரும் கூறக்கேட்டிருப்போம். ஆனால் அதனை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அளவில் பெரிய காண்டாமிருகத்தை குட்டி நாய் ஒன்று விரட்டும் செயல் இணையவாசிகளின் கவனம் பெற்று வருகின்றது. ’ Size Does Not Matter ' எனும் வாசகத்தோடு இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  இந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளனர். நாய் குட்டி துரத்திய பின்னர் அதனிடம் உங்களிடம் இதனை செய்ய எப்படி முடிந்தது என கேள்வி கேட்பது போலவும். அன்னைக்கி கொஞ்சம் மப்புல இருந்தேன் என நாய்க்குட்டி கூறுவது போலவும் வைரலான புகைப்படத்தை வைத்து நகைச்சுவையாக மீம்ஸ் போட்டுள்ளனர்.  எனினும் சாதிக்க ’ Size Does Not Matter ' என்ற வாசகம் அடங்கிய வீடியோக்கள் இதற்கு முன்னதாக இணையத்தில் வைரலாகி உள்ளது. அவற்றில் கடந்த ஆண்டு வைரலாக இணையவாசிகளால் பகிரப்பட்ட வீடியோவில், சண்டை போட அளவு முக்கியம் இல்லை..... தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தா போது‌ம் என உருவத்தில் மிகவும் சிறிதாக இருந்த ஒருவரின் தன்னம்பிக்கை அடங்கிய வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலானது.

        இவ்விதம் தன்னை விட உருவத்தில் மிகப் பெரிய விலங்குகளோடு எதிர்த்து நின்ற சிறு விலங்குகளின் வீடியோக்கள் பல இணையத்தில் இதற்கு முன்னர் வைரலாகியுள்ளது.

  எனினும் இந்த ஒற்றை புகைப்படம் பலரின் கவனம் பெற்று ’ Size Does Not Matter ' எனும் வாசகத்தை பலரின் மனதில் பதிவேற்றியுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: